ஜே.சி.பி., என்.எக்ஸ்.டி., 215 எல்.சி., எரிபொருள் செலவு ஆண்டிற்கு 2.90 லட்சம் சேமிப்பு
ஜே.சி.பி., என்.எக்ஸ்.டி., 215 எல்.சி., எரிபொருள் செலவு ஆண்டிற்கு 2.90 லட்சம் சேமிப்பு
ADDED : அக் 23, 2024 09:01 AM

ஜே.சி.பி., நிறுவனம், மிக குறைவாக எரிபொருளை பயன்படுத்தும் வகையில் என்.எக்ஸ்.டி., 215 எல்.சி., ப்யூயல் மாஸ்டர் என்ற எக்ஸ்கவேட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது.
பழைய எக்ஸ்கவேட்டரை ஒப்பிடுகையில், இதன் எரிபொருள் செலவு 14 சதவீதம் குறைவதாகவும், 5 சதவீதம் கூடுதல் பணியை மேற்கொள்ள முடியும் என்றும் இந்நிறுவனம் கூறி உள்ளது. கார், பைக்குகளில் இருப்பதை போன்ற ஐடில் ஸ்டார்ட் ஸ்டாப் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஆண்டிற்கு 2.90 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதன் மொத்த செயல்பாட்டு எடை, 21,500 கிலோவாக உள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள லோடு பக்கெட்டின் மூலம் 5,500 கிலோ எடை வரை துாக்கிச் செல்ல முடியும்.
இந்திய சூழலில் பல கட்ட சோதனைகள் செய்ததன் அடிப்படையில், பராமரிப்பு செலவு குறைந்துள்ளதாக இந்நிறுவனம் கூறி உள்ளது. இதற்கு முக்கிய காரணம், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள நவீன ஹைட்ராலிக்ஸ் தொழில்நுட்பம் ஆகும்.
கூடுதல் வெளிச்சத்திற்கு, எல்.இ.டி., லைட்டுகள், எரிவாயு செலவை உடனுக்குடன் தெரிந்தகொள்ள, பிரத்யேக டிஸ்ப்ளே, கடின மான பணிகளை மேற்கொள்ள, பவர் பூஸ்ட் வசதி ஆகியவை இதில் உள்ளன. இந்த பவர் பூஸ்ட் வசதியை பயன்படுத்தி, பாறைகளை உடைக்கும் பணிகளை எளிதாக செய்ய முடியும்.

