கியா 'இ.வி., - 6' 8 சதவீத கூடுதல் ஆற்றல், 581 கி.மீ., ரேஞ்ச்
கியா 'இ.வி., - 6' 8 சதவீத கூடுதல் ஆற்றல், 581 கி.மீ., ரேஞ்ச்
ADDED : ஏப் 02, 2025 08:50 AM

'கியா' நிறுவனம், அதன் 'இ.வி., - 6' மின்சார எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி அறிமுகப்படுத்தி உள்ளது.
பழைய 77.4 கி.வாட்.ஹார்., லித்தியம் அயான் பேட்டரிக்கு பதிலாக புதிய 84 கி.வாட்.ஹார்., 'என்.எம்.சி.,' என்ற வேறு வகை லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது.
இந்த புதிய பேட்டரி, 8 சதவீதம் அதிக ஆற்றலை வெளிப்படுத்துவதால், காரின் ரேஞ்ச் 53 கி.மீ., அதிகரித்து, 581 கி.மீ.,ராக உள்ளது.
சேசிஸில் எந்த மாற்றமும் செய்யாமல், இந்த புதிய பேட்டரி காரின் அடிப்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
350 கி.வாட்., பாஸ்ட் சார்ஜிங் வாயிலாக, 80 சதவீதம் சார்ஜ் செய்ய, 18 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. இ.வி., 9 மின்சார காரை போன்ற, ஸ்டார் மேப் எல்.இ.டி., லைட்டுகள், சீரமைக்கப்பட்ட பம்பர்கள், புதிய 19 அங்குல அலாய் சக்கரங்கள் ஆகியவை டிசைன் மாற்றங்கள். உட்புறத்தில், மூன்று ஸ்போக் ஸ்டீயரிங், சாவி இல்லாமல் கை ரேகை வைத்து காரை ஸ்டார்ட் செய்யும் வசதி, 12.3 அங்குல வளைவான டிஸ்ப்ளே, 14 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, 100க்கும் அதிகமான கார் இணைப்பு வசதிகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. பாதுகாப்புக்கு அடாஸ் லெவல் 2, 8 காற்று பைகள் உள்ளன.

