தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/கே.டி.எம்., ‘டியூக் 200’ குயிக்–ஷிப்டர், டிராக்ஷன் கன்ட்ரோல் வருகை

கே.டி.எம்., ‘டியூக் 200’ குயிக்–ஷிப்டர், டிராக்ஷன் கன்ட்ரோல் வருகை

கே.டி.எம்., ‘டியூக் 200’ குயிக்–ஷிப்டர், டிராக்ஷன் கன்ட்ரோல் வருகை


ADDED : நவ 04, 2026 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2026 01:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘கே.டி.எம்.,’ நிறுவனம், அதன் ‘டியூக் 200’ நேக்கட் ஸ்ட்ரீட் பைட்டர் பைக்கை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலை, கடந்த ஆண்டை விட 1,500 ரூபாய் அதிகம்.

நடப்பாண்டு பிப்ரவரியில், 320 எம்.எம்., பிரண்ட் டிஸ்க், குறைந்த எடை அலாய் சக்கரங்கள், இரு டூயல் டோன் நிறங்கள், 320 எம்.எம்., முன்புற டிஸ்க், 43 எம்.எம்., முன்புற யூ.எஸ்.டி., போர்க் சஸ்பென்ஷன், யூ.எஸ்.பி., – சி சார்ஜிங் போர்ட், கிராப் ரைல், புட் பேக் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டன.

தற்போது, இரு புதிய நிறங்கள், கிராபிக்ஸ், ரைட் பை ஒயர் தொழில்நுட்பம், இரு ரைட் மோடுகள், டிராக்ஷன் கன்ட்ரோல், பை டைரக்சனல் குயிக்–ஷிப்டர், 150 பிரிவு பெரிய ரேடியல் டயர்கள் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பைக்கில், ஏற்கனவே உள்ள 199.5 சிசி, லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர், இன்ஜின் கிடைக்கிறது. இந்த இன்ஜின், ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச், 6 – ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதர அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.

விலை – ரூ. 2.07 லட்சம்



இன்ஜின் – 199.5 சிசி, லிக்விட் கூல்டு


பவர் – 25 ஹெச்.பி.,
டார்க் – 19.3 என்.எம்.,
டேங்க் – 13.5 லிட்டர்
எடை – 159 கிலோ
கிரவுண்ட் கிளியரன்ஸ் – 155 எம்.எம்.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us