மூன்று ‘கொபெல்கோ’ எக்ஸ்கவேட்டர்கள் 19 முதல் 24 டன் பிரிவில் அறிமுகம்
மூன்று ‘கொபெல்கோ’ எக்ஸ்கவேட்டர்கள் 19 முதல் 24 டன் பிரிவில் அறிமுகம்
ADDED : நவ 04, 2026 01:41 AM

‘கொ பெல்கோ’ நிறுவனம், இந்தியாவில் 19 முதல் 24 டன் எடை பிரிவில், ‘எஸ்.கே.,210, எஸ்.கே.,215 – எல்.சி., எஸ்.கே.,230 – எக்ஸ்.டி.எல்.சி.,’ ஆகிய மூன்று புதிய மாடல் எக்ஸ்கவேட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.
‘எஸ்.கே.,210’ என்பது அடிப்படை மாடல் ஆகும். ‘எஸ்.கே.,215 – எல்.சி.,’ மாடல் எக்ஸ்கவேட்டரில், மேடு, பள்ளம், மலைப்பகுதிகளில் நிலையாக செயல்பட, கூடுதல் நீளம் உள்ள அன்டர் கரேஜ் வந்துள்ளது. ‘எஸ்.கே.,230 – எக்ஸ்.டி.எல்.சி.,’ மாடல் எக்ஸ்கவேட்டரில், குவாரி, சுரங்க பணிகளுக்காக பலமான சேசிஸ், கூடுதல் நீளம் உள்ள அன்டர் கரேஜ் வந்துள்ளது.
இவை மூன்றிலும், 150 ஹெச்.பி., பவரை வெளிப் படுத்தும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ‘கமின்ஸ்’ நிறுவனத்தின், 4.5 லிட்டர், சி.ஆர்.டி.ஐ., டீசல் பி.எஸ்., 4 இன்ஜின் கிடைக்கிறது.
அடிப்படையாக ஏ.சி., கேபின், பணிகளை மேற்கொள்ள எல்.இ.டி., லைட்டுகள், ஜியோ ஸ்கேன் என்ற இயந்திர கண்காணிப்பு வசதி, 6,000 மணி நேரம் ஹைட்ராலிக் ஆயில் மாற்றம், 2,000 மணி நேரம் ஹைட்ராலிக் பில்டர் மாற்றம் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்கள்.
முதல் இரு மாடல்களுக்கும் 0.93 – 1.05 க்யூ.மீ., அளவிலும், கடைசி மாடலுக்கு 1 முதல் 1.20 க்யூ.மீ., அளவிலும் பக்கெட் உள்ளது.
