நீண்ட, நிலையான வளர்ச்சி, வாடிக்கையாளர் நம்பிக்கை பெறுவதில் கவனம்
நீண்ட, நிலையான வளர்ச்சி, வாடிக்கையாளர் நம்பிக்கை பெறுவதில் கவனம்
ADDED : செப் 30, 2026 07:35 AM

பென்ஸ், பி.எம்.டபுள்யூ., நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், ஆடி நிறுவனத்தின் சந்தை பங்கு, விற்பனை சரிந்துள்ளதே?
குறுகிய வளர்ச்சியை விட நீண்ட மற்றும் நிலையான வளர்ச்சி, வாடிக்கையாளர்களின் நம்பிக்கை பெறுவதில் அதிக கவனம் செலுத்துகிறோம். எங்கள் நிறுவன வளர்ச்சி வலுவாக உள்ளது.
போட்டியாளர்கள் இடையே தனித்து நிற்க ஆடி நிறுவன டீலர்ஷிப்களை அதிகப்படுத்தி, வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு சொகுசு செடான்களை விட, 'க்யூ' சிரீஸ் கார்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுமா?
ஆடி நிறுவனத்தின் மொத்த விற்பனையில், எஸ்.யூ.வி., கார்களின் பங்கு 60 சதவீதமாக உள்ளது. எனவே, 'க்யூ' சிரீஸ் கார்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அதே சமயம், முக்கிய பங்காற்றும் பாரம்பரிய சொகுசு செடான் கார்களும், எங்கள் அணிவகுப்பில் தொடர்ந்து நீடிக்கும்.
இறக்குமதி முறையில் வரும் 'ஈ - ட்ரான்' மின்சார சொகுசு கார்களின் முதல் தொகுப்பு விற்பனை முடிந்துவிட்டன. சொகுசு மின்சார கார்களின் தேவை தொடர்ந்து அதிகரிப்பதால், அடுத்த முறை கூடுதல் ஒதுக்கீடு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
ஆடி நிறுவனத்திற்கு தமிழகம் ஏன் முக்கியம்?
தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் அதிவேக ஸ்போர்ட்ஸ் மாடல், நவீன சொகுசு எஸ்.யூ.வி., கார்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் முதிர்ச்சியான வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ளனர். தென் இந்தியாவில், மோட்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் அதிவேக ஸ்போர்ட்ஸ் கார்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட கலாசாரம் உள்ளது.
எனவே, வாடிக்கையாளர்களுக்கு ரேஸ் டிராக் அனுபவத்தையும், கார் பிரியர்களுக்கான நிகழ்வுகளையும் ஆடி நிறுவனம் அடிக்கடி ஏற்பாடு செய்கிறது.
பல்பீர் சிங் தில்லன், பிராண்ட் இயக்குநர், ஆடி இந்தியா.
