தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/மஹிந்திரா 'வீரோ' டீசல் 1.6டன் சுமக்கும் பிரீமியம் பிக்கப் டிரக்

மஹிந்திரா 'வீரோ' டீசல் 1.6டன் சுமக்கும் பிரீமியம் பிக்கப் டிரக்

மஹிந்திரா 'வீரோ' டீசல் 1.6டன் சுமக்கும் பிரீமியம் பிக்கப் டிரக்


UPDATED : அக் 07, 2026 08:32 AM

ADDED : அக் 06, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 08:32 AM ADDED : அக் 06, 2026 08:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மஹிந்திரா' நிறுவனம், முதல் முறையாக 'வீரோ' டீசல் மாடல் பிக்கப் டிரக் வாகனத்தை மேம்படுத்தி, அறிமுகம் செய்துள்ளது. இ - வணிகம், சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் இந்த வாகனம், மூன்று உடல் அமைப்புகளிலும், இரு மாடல்களிலும் வந்துள்ளது.

இதில், ஏற்கனவே உள்ள 1.5 லிட்டர், 3 சிலிண்டர், டீசல் இன்ஜின் நீடிக்கிறது. இந்த இன்ஜின், 5 - ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 9 மற்றும் 10 அடி நீளம் என இரு வகையில் கிடைக்கும் இந்த வாகனத்தின் டெக், 1.5 முதல் 1.6 டன் எடையை சுமக்கும் திறன் உடையது. இதில், 50 லிட்டர் டீசல் டேங்க் இருப்பதால், முழு எரிபொருளுடன் 920 கி.மீ.,ருக்கு அதிகமாக பயணம் செய்யலாம் என இந்நிறுவனம் கூறுகிறது. மைலேஜ், 18.4 கி.மீ., ஆகும்.

உயர்ரக மாடலில், ரிவர்ஸ் கேமரா மற்றும் சென்சார்கள், டிரைவர் ஏர் பேக், இரு ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், யூ.எஸ்.பி., சி மற்றும் பி டைப் சார்ஜிங், 9 அங்குல நடு டிஸ்ப்ளே, டிஜிட்டல் கிளஸ்டர், ஏ.சி., சிலிப்பர் கேபின், வாய்ஸ் கமாண்ட், 50க்கும் அதிகமான வாகன இணைப்பு மற்றும் போன் இணைப்பு வசதிகள் உள்ளிட்ட நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பவர் ஸ்டீயரிங் மற்றும் விண்டோஸ், ரிக்லைன் டிரைவர் சீட் உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையாக கிடைக்கின்றன. இந்த வாகனத்தில், டிரைவர் உட்பட மூன்று பேர் பயணிக்கலாம்.

விலை: ரூ. 8.29 லட்சம் - ரூ. 9.45 லட்சம்



இன்ஜின் - 1.5 லிட்டர், டீசல்


பவர் - 80 ஹெச்.பி.,
டார்க் - 210 என்.எம்.,
சரக்கு எடை - 1.6 டன்
டேங்க் - 50 லிட்டர்
மைலேஜ் - 18.4 கி.மீ.,
ரேஞ்ச் - 920 கி.மீ.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us