ADDED : டிச 25, 2024 08:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'மஹிந்திரா' நிறுவனம், அதன் 'பி.இ., - 6' மற்றும் 'எக்ஸ்.இ.வி., - 9இ' மின்சார கார்களுக்கு 'டோல்பி அட்மோஸ்' வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வசதி கொண்ட முதல் இந்திய கார் நிறுவனமாக மஹிந்திரா விளங்குகிறது.
டோல்பி அட்மோஸ் வசதி, தியேட்டர்கள், ஸ்மார்ட் போன்கள், ஹெட் போன்களில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒலியை, 3டி ஆக மேம்படுத்தி, தெளிவான அனுபவத்தை ஸ்பீக்கரின் மூலம் தருகிறது. இந்த காரில், 16 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் சவுண்டு சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.