எக்ஸ்.இ.வி., '9-இ' இ.வி., டாடாவை 'நாக் அவுட்' செய்த மஹிந்திரா
எக்ஸ்.இ.வி., '9-இ' இ.வி., டாடாவை 'நாக் அவுட்' செய்த மஹிந்திரா
ADDED : டிச 04, 2024 08:52 AM

'மஹிந்திரா' நிறுவனம், 'பி.இ., '6-இ' எஸ்.யூ.வி., மற்றும் 'எக்ஸ்.இ.வி., '9-இ' எஸ்.யூ.வி., கூபே என்ற இரு மின்சார கார்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, 4.3 மீ மற்றும் 4.8 மீ நீளம் கொண்ட கார்களாகும்.
இந்த இரு கார்களும், மஹிந்திராவின் பிரத்யேக மின் கட்டுமான தளமான 'இன்கிளோ' தளத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதில் உள்ள மென்பொருள் 'மியா' என்கிற செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்குகிறது.
மேலும், இதில் 165 சென்சார்கள், 5 ரேடார்கள், 6 கேமராக்கள் உள்ளிட்ட பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கார்களில், 79 மற்றும் 59 கி.வாட்.ஹார்., என இரு பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன.
பி.இ., '6-இ' காரின் ரேஞ்ச் 682 கி.மீ.,ரும், எக்ஸ்.இ.வி., '9-இ' காரின் ரேஞ்ச் 656 கி.மீ.,ரும் கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது. பாஸ்ட் சார்ஜர்கள் மூலம் 20 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய, வெறும் 20 நிமிடங்கள் போதுமானது.
டிசைனில், இரு கார்களும் 'கான்செப்ட்' கார்களை போன்று காட்சி அளிக்கின்றன.
லம்போர்கினி 'ஊரூஸ்' காரை போன்று இருப்பதால், சிலர் 'இந்தியன் லம்போர்கினி' என்று கூட சொல்கின்றனர்.
இதில், 7 பாதுகாப்பு பைகள், 16 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம், மூன்று டாஷ் போர்டு டிஸ்ப்ளேக்கள், செமி ஆக்ட்டிவ் சஸ்பென்ஷன்கள், பிரேக் பை ஒயர் தொழில்நுட்பம், யூ.வி., கதிர்வீச்சை தடுக்கும் கண்ணாடிகள், போர் விமானங்களை போன்ற டிஜிட்டல் காக்பிட் அமைப்பு, அடாஸ் லெவல், இரண்டடுக்கு பாதுகாப்பு, ஆட்டோ பார்க் அமைப்பு, அலங்கார விளக்குகள் என பல அம்சங்கள் உள்ளன.