பவர் விண்டோஸ், எல்.சி.டி., டிஸ்ப்ளேவுடன் மஹிந்திரா வீரோ
பவர் விண்டோஸ், எல்.சி.டி., டிஸ்ப்ளேவுடன் மஹிந்திரா வீரோ
ADDED : அக் 02, 2024 03:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'மஹிந்திரா' நிறுவனம், அதன் 'வீரோ' என்ற புதிய இலகு ரக சரக்கு வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
'அர்பன் ப்ராஸ்பர் பிளாட்பார்ம்' என்ற உருவாக்கு தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம், டீசல் மற்றும் சி.என்.ஜி., பவர் டிரைன்களில் வந்துள்ளது. இதில், மூன்று பேர் வரை பயணிக்கலாம்.
இதில், 1 -முதல் 2 டன் எடை வரை சுமக்க முடியும். பாதுகாப்பை பொறுத்த வரையில், ஓட்டுனர் ஏர்பேக், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, வலுவான ஸ்டீல் பிரேம் மற்றும் 'ஏஐஎஸ்096' என்ற பாதுகாப்பு தரத்திற்கு இணங்க இந்த வாகனம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
கார்களில் இருப்பதைப் போன்ற, 26.03 சி.மீ., டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஸ்டீயரிங் மவுண்டட் கண்ட்ரோல், பவர் விண்டோஸ் உள்ளிட்ட நவீன அம்சங்களும் இதில் உள்ளன.
விலை ரூ.7.99 லட்சம் -- ரூ.9.56 லட்சம்