மாருதி 'ஈகோ' எம்.பி.வி., ரூ. 6 லட்சத்தில், 6 - சீட்டர் கார்
மாருதி 'ஈகோ' எம்.பி.வி., ரூ. 6 லட்சத்தில், 6 - சீட்டர் கார்
ADDED : ஏப் 23, 2025 10:01 AM

'மாருதி சுசூகி' நிறுவனம், அதன் 'ஈகோ' எம்.பி.வி., காரை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் விலை, 25,500 ரூபாய் உயர்ந்துள்ளது.
ஏழு சீட்டர் காரின் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது ஐந்து மற்றும் ஆறு சீட்டர் வகையில் மட்டுமே வருகிறது.
அதற்கு மாற்றாக, ஆறு சீட்டர் காரின், நடு வரிசையில், இரு கேப்டன் சீட்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பை அதிகரிக்க, 6 காற்று பைகள் அடிப்படை அம்சமாக வழங்கப்படுகின்றன. 3 - பாயிண்ட் சீட் பெல்ட்டுகள், சீட்டோடு இழுத்து பிடிக்க 'சீட் பெல்ட் ப்ரீடென்ஷனர்', அது இறுக்காத வகையில் பிடிக்க 'போர்ஸ் லிமிட்டர்' உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
வெளிப்புறத்தில், மேம்படுத்தப்பட்ட பம்பர்கள், ஹேலோஜன் லைட்டுகள், 13 அங்குல ஸ்டீல் சக்கரங்கள், காரின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு பகுதிகள் காற்று பைகளை வைக்க சீரமைப்பு ஆகியவை புதிய மாற்றங்கள்.
உட்புறத்தில், டிஜிட்டல் டிஸ்ப்ளே, புதிய மூன்று ஸ்போக் ஸ்டீயரிங், ரிக்லைன் முன்புற சீட்கள், ஏர் பில்டர், பேப்ரிக் சீட்கள் ஆகியவை புதிதாக வழங்கப்பட்டவை. இதில் உள்ள, 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 20 சதவீத எத்தனால் கலப்பு எரிவாயுவில் இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கார் சி.என்.ஜி., வகையிலும் வருகிறது. இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

