மாருதி சுசூகி டிசையர் கிராஷ் டெஸ்டில் '5 - ஸ்டார்'
மாருதி சுசூகி டிசையர் கிராஷ் டெஸ்டில் '5 - ஸ்டார்'
ADDED : நவ 13, 2024 08:15 AM

'மாருதி சுசூகி' நிறுவனம், அதன் நான்காம் தலைமுறை 'டிசையர்' காம்பாக்ட் செடான் காரை அறிமுகப்படுத்தி உள்ளது. குளோபல் கிராஷ் டெஸ்டில், 5 ஸ்டார்களை பெற்ற மாருதியின் முதல் கார் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
என்னதான் ஸ்விப்ட் காரின் அதே கட்டமைப்பு தளத்தில் உருவாக்கப்பட்டு இருந்தாலும், இதன் வெளிப்புற டிசைன் முற்றிலும் மாறுபட்டுள்ளது. புதிய பம்பர்கள், பெரிய கிரில், 15 அங்குல அலாய் சக்கரங்கள், கிரிஸ்டல் எல்.இ.டி., ஹெட் லைட் மற்றும் டெயில் லைட்டுகள் ஆகியவை இதன் வெளிப்புற மாற்றங்கள். ஸ்விப்ட் காரில் உள்ள அதே இசட் சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் தான் இதிலும் வழங்கப்பட்டுள்ளது.
உட்புறத்தில் டூயல் டோன் கேபின், சன் ரூப் வசதி, வயர்லெஸ் சார்ஜிங், ரியர் ஏ.சி., வெண்ட்கள், 9 அங்குல இன்போடெயின்மென்ட் அமைப்பு ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
அடிப்படை அம்ச மாக ஆறு பாதுகாப்பு காற்று பைகள் மற்றும் 15க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வசதிகள் இதில் உள்ளன.
விலை: ரூ.6.79 - 10.14 லட்சம்
டீலர்:Khivraj Maruti 98410 02541