தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/மெர்சிடிஸ் 'மேபேக் எஸ் 580.இ.,' 34.48 கி.மீ., மைலேஜ் தரும் சொகுசு செடான்

மெர்சிடிஸ் 'மேபேக் எஸ் 580.இ.,' 34.48 கி.மீ., மைலேஜ் தரும் சொகுசு செடான்

மெர்சிடிஸ் 'மேபேக் எஸ் 580.இ.,' 34.48 கி.மீ., மைலேஜ் தரும் சொகுசு செடான்


UPDATED : அக் 14, 2026 12:00 AM

ADDED : அக் 13, 2026 08:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 12:00 AM ADDED : அக் 13, 2026 08:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனம், 'மேபேக் எஸ் 580.இ.,' என்ற 'பிளக் இன் ஹைபிரிட்' சொகுசு செடான் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் இறக்குமதி முறையில் வரும் நிலையில், இந்தியாவுக்கு முதல் தொகுப்பில் 30 கார்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளன.

இம்முறை 4.0 லிட்டர், வி8 இன்ஜினுக்கு பதிலாக, 3.0 லிட்டர், இன்லைன் 6 - சிலிண்டர், பெட்ரோல் பிளக் இன் ஹைபிரிட் இன்ஜின் வந்துள்ளது. ஆல் வீல் டிரைவ் அமைப்பில் வரும் இந்த காரின் இன்ஜின், 9 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோ கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 22 கி.வாட்.ஹார்., ஹைபிரிட் பேட்டரி உள்ளது. ஒரு முழு சார்ஜில், இ.வி., மோடில், 98 கி.மீ., வரை பயணம் மேற்கொள்ளலாம். இந்த காரின் மைலேஜ், 34.48 கி.மீ., வரை தருவதாக இந்நிறுவனம் கூறுகிறது.

நீளம் 5.5 மீ உள்ள இந்த காரில், ஏர் சஸ்பென்ஷன், ரியர் ஆக்சிஸ் ஸ்டீயரிங், சொகுசு விமானத்தை போன்ற வென்ட்டிலேட்டர், மசாஜ் மற்றும் பவர்டு சீட்கள், பின்புறத்தில் சிறிய பிரிட்ஜ், மூன்று பெரிய டிஸ்ப்ளேக்கள் கொண்ட பெரிய டேஷ் போர்டு, 31 ஸ்பீக்கர் 4டி சவுண்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் பேட், ஹெட்போன், 20 சதவீதம் பெரிய ஒளிரும் கிரில், 20 அங்குல போர்ஜ்ட் மேபேக் சக்கரங்கள், 15 காற்று பைகள், அடாஸ் லெவல் 2 உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

விலை -ரூ. 3.35 கோடி



இன்ஜின் 3.0 லிட்டர், பிளக் இன் ஹைபிரிட்


பவர் 585 ஹெச்.பி.,
டார்க் 750 என்.எம்.,
டாப் ஸ்பீடு 250 கி.மீ.,
மைலேஜ் 34.48 கி.மீ.,
(0 100 கி.மீ.,) பிக்கப் 4.8 வினாடி
பூட் ஸ்பேஸ் 505 லிட்டர்
கிரவுண்ட் கிளியரன்ஸ் - 130 எம்.எம்.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us