ஹோண்டா ‘எலிவேட்’ எஸ்.யூ.வி., அதிகம் எதிர்பார்த்த ஹைபிரிட் இன்ஜின் இல்லை
ஹோண்டா ‘எலிவேட்’ எஸ்.யூ.வி., அதிகம் எதிர்பார்த்த ஹைபிரிட் இன்ஜின் இல்லை
UPDATED : அக் 14, 2026 12:00 AM
ADDED : அக் 13, 2026 08:16 PM

‘ஹோண்டா கார்ஸ்’ நிறுவனம், அதன் ‘எலிவேட்’ எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், ‘இசட்.எக்ஸ்., பிளஸ்’ மற்றும் ‘இசட்.எக்ஸ்., பிளஸ் பிளாக்’ என்ற இரு புதிய மாடல்கள் உட்பட மொத்தம் ஆறு மாடல்களில் கிடைக்கிறது.
ஹைபிரிட் இன்ஜின் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏற்கனவே உள்ள 1.5 லிட்டர், 4 – சிலிண்டர், என்.ஏ., பெட்ரோல் இன்ஜின் மட்டும் நீடிக்கிறது. பிரண்ட் வீல் டிரைவில் வரும் இந்த காருக்கு, 6 – ஸ்பீடு மேனுவல் மற்றும் சி.வி.டி., ஆட்டோ கியர்பாக்ஸ்கள் கிடைக்கின்றன. அதிவேகத்தில் காற்றின் சத்தம் காருக்குள் வராமல் இருக்க, கேபின் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மிட் சைஸ் பிரிவில் முதல் முறையாக எந்த காரிலும் கிடைக்காத, பின்புற சீட் வெண்டிலேஷன் வந்துள்ளது. காற்று சுத்திகரிப்பு வசதியுடன் வரும் ஆட்டோ ஏ.சி., 360 டிகிரி கேமரா, கனெக்டட் டி.ஆர்.எல்., மற்றும் டெயில் லைட், கம்பீரமான கிரில், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு, பவர்டு மற்றும் வெண்ட்டிலேட்டட் முன்புற சீட்கள், 10.25 அங்குல டிஸ்ப்ளே ஆகிய அம்சங்கள், 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. மற்றபடி, 6 காற்று பைகள், ஒயர்லேஸ் சார்ஜர் மற்றும் கார் இணைப்பு வசதிகள், சன் ரூப், அலங்கார விளக்குகள் உள்ளிட்டவை நீடிக்கின்றன.
ஒரு புதிய நிறம் உட்பட 10 நிறங்களில் வரும் இந்த காருக்கு, மூன்று ஆண்டு அல்லது ஒரு லட்சம் கி.மீ., வரை அடிப்படை உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
