ADDED : ஜூலை 08, 2026 07:20 AM

'எ ம்.ஜி.,' நிறுவனம், அதன் புதிய 7 சீட்டர், 'பிளக் இன் ஹைபிரிட்' மற்றும் 'மின்சார' எஸ்.யூ.வி., கார்களை வரும் ஜூலை 16ம் தேதி அறிமுகம் செய்கிறது. இந்த கார், சீனாவின் 'வூலிங் ஸ்டார்லைட் 560' என்ற எஸ்.யூ.வி., காரை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிளக் இன் ஹைபிரிட் மாடல் காரில், 1.5 லிட்டர், பெட்ரோல் இன்ஜின் மற்றும் 20.5 கி.வாட்.ஹார்., பேட்டரி கொண்ட ஹைபிரிட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. முழு பெட்ரோல் டேங்கில், 1,000 கி.மீ., வரையிலும், இ.வி., மோடில் 125 கி.மீ., வரையிலும் பயணிக்கலாம் என கூறப்படுகிறது.
மின்சார மாடல் காரில், 69.2 கி.வாட்.ஹார்., பேட்டரி கிடைக்கிறது. முழு சார்ஜில் 530 கி.மீ., வரை பயணிக்க முடியும். 4.74 மீட்டர் நீளம், 12.8, 8.8 அங்குல இரு டிஸ்ப்ளேக்கள், பேனரோமிக் சன் ரூப், முன்புற குளுகுளு சீட், அடாஸ் வசதி, 6 காற்று பைகள் உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
