தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/டாடா 'சியரா இ.வி.,' 665 கி.மீ., ரேஞ்ச் 5.8 வினாடியில் 100 கி.மீ., வேகம்

டாடா 'சியரா இ.வி.,' 665 கி.மீ., ரேஞ்ச் 5.8 வினாடியில் 100 கி.மீ., வேகம்

டாடா 'சியரா இ.வி.,' 665 கி.மீ., ரேஞ்ச் 5.8 வினாடியில் 100 கி.மீ., வேகம்


ADDED : ஜூலை 08, 2026 07:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 07:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், 'சியரா இ.வி.,' என்ற மிட் சைஸ் மின்சார எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. இது, 'கர்வ் இ.வி.,' காரை விட 1.8 லட்சம் ரூபாய் அதிகம்.

'ஹேரியர் இ.வி.,' கார் உருவாக்கப்பட்ட அதே உற்பத்தி தளத்தில், இந்த காரும் உற்பத்தி செய்யப்படுகிறது. 'ரியர் வீல்' மற்றும் 'ஆல் வீல் டிரைவ்' அமைப்புகளில் வரும் இந்த கார், 63 மற்றும் 75 கி.வாட்.ஹார்., என இரு பேட்டரிகளில் கிடைக்கிறது.

முழு சார்ஜில், 535 முதல் 665 கி.மீ., ரேஞ்ச் தருவதாக இந்நிறுவனம் கூறுகிறது. பேட்டரியை முழு சார்ஜ் செய்ய, 120 கி.வாட்., டி.சி., பாஸ்ட் சார்ஜர் வாயிலாக 26 நிமிடம் எடுக்கிறது. அதுவும், 15 நிமிட சார்ஜில், 250 கி.மீ., வரை பயணிக்க முடியும். இரு பேட்டரிகளுக்கும், 15 ஆண்டு வாழ்நாள் உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

முன்புற பம்பர், 18, 19 அலாய் சக்கரங்கள் ஆகியவை வெளிப்புற மாற்றங்கள். உட்புறத்தில், 12.3, 10.25 அங்குல மூன்று டிஸ்ப்ளேக்கள், 12 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், டூயல் ஜோன் ஏ.சி., காற்று சுத்திகரிப்பு வசதி, பவர்டு, வென்ட்டிலேட்டட் முன்புற சீட்கள், கார் இணைப்பு வசதி, 6 ஆப்ரோட் மோடுகள், ஆட்டோ பார்க், சம்மன் மோடு, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 6 காற்று பைகள், பவர்டு டெயில்கேட், லெவல் 2 அடாஸ், 540 டிகிரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கார், ஏழு நிறங்களில் கிடைக்கிறது.

விலை - ரூ. 18.79 - ரூ. 25.99 லட்சம்



பேட்டரி - 63 கி.வாட்.ஹார்., 75 கி.வாட்.ஹார்., பவர் - 238 ஹெச்.பி., 349 ஹச்.பி., (ஆல் வீல் டிரைவ்) டார்க் - 315 என்.எம்., 504 என்.எம்., ரேஞ்ச் - 535 கி.மீ., 665 கி.மீ., பூட் ஸ்பேஸ் - 622 லிட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் - 205 எம்.எம்., (0 - -100 கி.மீ.,) பிக்கப் - 5.8 வினாடி



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us