ADDED : ஜன 29, 2025 09:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், 'நெக்ஸான் சி.என்.ஜி., டார்க் எடிஷன்' காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த காரின் விலை, 12.70 ரூபாய் முதல்14.70 லட்சம் ரூபாய் வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, மொத்தம் மூன்று வகையில் வந்துள்ளது. சிறப்பு எடிஷன் என்பதால், சாதாரண 'நெக்ஸான் சி.என்.ஜி.,' காரை விட, 20,000 முதல் 40,000 ரூபாய் வரை விலை அதிகம். இந்த காரில், குரோம் மற்றும் வெள்ளி நிற அலங்காரங்களுக்கு பதிலாக, கார் முழுதும் கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில், 1.2 லிட்டர், 3 சிலிண்டர், டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, 100 ஹெச்.பி., பவரையும், 170 என்.எம்., டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இந்த கார், மேனுவல் கியர் பாக்ஸில் மட்டுமே வருகிறது.

