ADDED : பிப் 05, 2025 08:31 AM

'நிஸான்' நிறுவனம், இந்தியாவில் சி.என்.ஜி., மற்றும் மின்சார கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது, 'மேக்னைட்' மற்றும் 'எக்ஸ் - டிரைல்' ஆகிய இரு கார்கள் உள்நாட்டு விற்பனையில் உள்ளன.
உள்நாட்டில் இருப்பை அதிகரிக்க, இரு எஸ்.யூ.வி., கார்களை அறிமுகப்படுத்துவதாக இந்நிறுவனம் முன்னதாக தெரிவித்து இருந்தது. இந்நிலையில், கூடுதலாக சி.என்.ஜி., மற்றும் மின்சார கார்களையும் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் வாயிலாக, ஆண்டுக்கு 1 லட்சம் கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிஸான் நிறுவனத்தின் மிகப்பெரிய ஏற்றுமதி மையமாக இந்தியா விளங்குகிறது. மேக்னைட் கார் உலக அளவில், 20 நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. தற்போது, இடதுபுற டிரைவிலும் இந்த கார் உற்பத்தி செய்யப்படுவதால், கூடுதலாக 45 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. அண்மையில், அதன் முதல் 10,000 இடதுபுற டிரைவ் கார்களை ஏற்றுமதி செய்தது இந்நிறுவனம்.