ADDED : பிப் 27, 2025 08:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ்' நிறுவனம், அதன் 'சி.பி., - 200 எக்ஸ்' பைக்கின் பெயரை 'என்.எக்ஸ்., 200' என்று மாற்றி, புதுப்பித்து அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பைக்கின் உமிழ்வுகளை கண்காணிக்க 'ஓ.பி.டி., 2' அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதன் டிசைன் மற்றும் இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், இன்ஜின் ட்யூன் செய்யப் பட்டு, 0.4 என்.எம்., டார்க் குறைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினோடு, 5 - ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
'ஆக்டிவா' ஸ்கூட்டரில் உள்ள 4.2 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, ப்ளூடூத் இணைப்பு வசதி, டிராக் ஷன் கன்ட்ரோல் அமைப்பு ஆகிய அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த பைக்கின் விலை, 17,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.