'5-சீட்டர்' எக்ஸ்.யூ.வி., 700 கார் உற்பத்தி நிறுத்தம்
'5-சீட்டர்' எக்ஸ்.யூ.வி., 700 கார் உற்பத்தி நிறுத்தம்
ADDED : மே 14, 2025 03:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'மஹிந்திரா' நிறுவனத்தின் 'எக்ஸ்.யூ.வி., - 700' காரின், 5-சீட்டர் மாடல்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது, 'எம்.எக்ஸ்.,' 'ஏ.எக்ஸ்., - 5' மற்றும் 'ஏ.எக்ஸ்., - 5 எஸ்' ஆகிய மூன்று 5 சீட்டர் மாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதனால், இந்த காரின் ஆரம்ப விலை, 13.99 லட்சத்தில் இருந்து, 14.49 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், 15 மாடல்கள் குறைக்கப்பட்டு, மொத்தம் 43 மாடல்களில் இந்த கார் விற்பனையில் உள்ளது. தற்போது, 6 மற்றும் 7 - சீட்டர் மாடல்களில் மட்டுமே, இந்த கார் வருகிறது.