2018 முதல் தமிழகத்தில் முன்னிலை பி.எம்.டபிள்யூ., தலைவர் பெருமிதம்
2018 முதல் தமிழகத்தில் முன்னிலை பி.எம்.டபிள்யூ., தலைவர் பெருமிதம்
ADDED : அக் 28, 2026 11:05 AM

பி.எம்.டபிள்யூ., நிறுவனத்திற்கு தமிழகம் ஏன் முக்கியம்?
தமிழகம், எங்களின் முக்கிய விற்பனை சந்தையாகவும், உற்பத்தி மையமாகவும் இருக்கிறது. தமிழக சொகுசு கார் சந்தையில், 37 சதவீத சந்தை பங்கு வைத்துள்ள பி.எம்.டபிள்யூ., நிறுவனம், 2018 முதல் முன்னணியில் உள்ளது. மின்சார சொகுசு கார் விற்பனையில், 50 சதவீத சந்தை பங்கை கைப்பற்றி உள்ளோம்.
சென்னையை தொடர்ந்து, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் எங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. சென்னை உற்பத்தி ஆலையில், 3 புதிய கார்கள் உட்பட 13 சொகுசு கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதில், ஐ.எக்ஸ்., 1, ஐ5 லாங் வீல் பேஸ் உட்பட மூன்று மின்சார சொகுசு கார்கள் அடங்கும். இந்த ஆலையில், ஆண்டுக்கு சராசரியாக 17 ஆயிரத்து 500 கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
நடப்பாண்டு விற்பனையில், பி.எம்.டபுள்யூ., நிறுவனம் சாதனை படைத்துள்ளதே?
நடப்பாண்டின் முதல் பாதியில், வரலாற்றில் இதுவரை காணாத அளவில், 9,075 சொகுசு கார்களை விற்பனை செய்துள்ளோம். இது, கடந்த ஆண்டை விட 17 சதவீதம் அதிகம். மொத்த விற்பனையில், 65 சதவீதம் சொகுசு எஸ்.யூ.வி., கார்களும், 52 சதவீதம் லாங் வீல் பேஸ் கார்களும், 26 சதவீதம் மின்சார கார்களும் ஆகும். குறிப்பாக, மின்சார கார் விற்பனை, கடந்த ஆண்டை விட 78 சதவீதம் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மயமாக்கல் எந்த அளவுக்கு உள்ளது?
மின்சார கார்கள் உட்பட மொத்த அணிவகுப்பின் உள்நாட்டு மயமாக்கல் 50 சதவீதத்தில் உள்ளது. மின்சார கார்களில் வரும் பேட்டரி செல்கள், உலக வினியோக தொடரை சார்ந்து இருப்பதால், அதில் உள்நாட்டு மயமாக்கலை அதிகரிப்பது சவாலாக உள்ளது.
அடுத்த தலைமுறை 'நியூ கிளாச' தொழில்நுட்பம், இந்தியாவுக்கு வருமா?
இந்த அடுத்த தலைமுறை தொழில்நுட்பம், பி.எம்.டபுள்யூ., '7 சீரிஸ் மற்றும் ஐ7' சொகுசு செடான் கார்களின் வாயிலாக, 2027ல் இந்திய சந்தைக்குள் வரும். அதை படிப்படியாக, மற்ற கார்களுக்கும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளோம்
அடுத்து அறிமுகமாகும் வாகனங்கள்?
நடப்பாண்டில், பி.எம்.டபிள்யூ., மினி, பி.எம்.டபிள்யூ., மோட்டோராட் பிராண்டின் கீழ், 25க்கும் அதிகமான வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதில், 14 வாகனங்கள் அறிமுகமானது. புதிய மாடல், மேம்பாடுகள் மற்றும் சிறப்பு எடிஷன் என 10 வாகனங்கள் அறிமுகமாக உள்ளது.
ஹர்தீப் சிங் பிரார்,
தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி,
பி.எம்.டபிள்யூ., குழுமம் இந்தியா.
