அல்ட்ராவைய்லட் 'எக்ஸ் - 47' 343 கி.மீ., ரேஞ்ச் தரும் இ.வி., பைக்
அல்ட்ராவைய்லட் 'எக்ஸ் - 47' 343 கி.மீ., ரேஞ்ச் தரும் இ.வி., பைக்
UPDATED : அக் 28, 2026 11:16 AM
ADDED : அக் 28, 2026 11:08 AM

'அல்ட்ராவைய்லட்' நிறுவனம், 'எக்ஸ் - 47' மின்சார பைக்கை மேம்படுத்தி, 'எக்ஸ் - 47 வெனம்' என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை, கடந்த ஆண்டை விட 16 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.
இந்த பைக், குறைந்த எடை, அதிக ரேஞ்ச் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில், இயந்திர மற்றும் மின்னணு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வி.எக்ஸ்., 100 என்ற புதிய 100 வோல்ட் கட்டுமான தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கில், ஐந்து அடுக்கு பாதுகாப்பு கொண்ட 7.5 மற்றும் 11 கி.வாட்.ஹார்., என இரு லித்தியம் அயான் பேட்டரிகள் கிடைக்கின்றன. முழு சார்ஜில், 227 மற்றும் 343 கி.மீ., ரேஞ்ச், 5.9 வினாடியில் 100 கி.மீ., பிக்கப், 17 கிலோ அளவுக்கு குறைந்த எடை ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும். இந்த பேட்டரியை முழு சார்ஜ் செய்ய, 5 மணி நேரம் 30 நிமிடங்கள் எடுக்கின்றன.

க்ரூஸ் கன்ட்ரோல், முன்புற, பின்புற டேஷ் கேம், ரேடார் வசதி, 7 அங்குல டச் ஸ்கிரீன், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., டிராக்ஷன் கன்ட்ரோல், பார்க்கிங் அசிஸ்ட், ப்ரீலோட் அட்ஜஸ்ட்டபிள் சஸ்பென்ஷன்கள், 17 அங்குல சக்கரங்கள், 110, 150 பிரிவு டயர்கள், மூன்று ரைட் மோடுகள் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
