UPDATED : ஆக 28, 2024 08:34 AM
ADDED : ஆக 28, 2024 08:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'மஹிந்திரா' நிறுவனத்தின் துணை நிறுவனமான 'பி.எஸ்.ஏ.,' அதன் 'கோல்டு ஸ்டார் 650' என்ற க்ரூஸர் பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, இந்நிறுவனத்திற்கு இந்தியாவில் முதல் பைக் ஆகும்.
வட்டமான ஹெட் லைட்டுகள், கிளாசிக் டிசைன், குரோம் அலங்காரங்கள் ஆகியவை பைக்கை கம்பீரமாக காட்டுகிறது. இதில், 652 சி.சி., லிக்விட் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
ஐந்து நிறங்களில் வரும் இந்த பைக்கில், 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட், யூ.எஸ்.பி., போர்ட், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., ஆகிய அம்சங்கள் உள்ளன.
ராயல் என்பீல்டு 'இன்டர்செப்டார் 650' பைக்கிற்கு இந்த பைக் கடும் சவாலாக இருக்கும்.
விலை: ரூ. 3 - 3.35 லட்சம் வரை

