ரெனோ 'டஸ்டர்' எஸ்.யூ.வி., டர்போ, ஹைபிரிட் இன்ஜின்களில் அறிமுகம்
ரெனோ 'டஸ்டர்' எஸ்.யூ.வி., டர்போ, ஹைபிரிட் இன்ஜின்களில் அறிமுகம்
ADDED : ஜன 28, 2026 07:59 AM

'ரெ னோ' நிறுவனம், அதன் 'டஸ்டர்' மிட்சைஸ் எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி, அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், மூன்று பெட்ரோல் இன்ஜின்களில் வந்துள்ளது.
அதாவது, 1 லிட்டர் டர்போ, 1.3 லிட்டர் டர்போ, 1.8 லிட்டர், ஸ்ட்ராங் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின்களில் கிடைக்கிறது. நகர்ப்புற பயணத்தில், 80 சதவீதம் மின்சாரத்தில் இயங்கும் வகையில் ஹைபிரிட் மாடல் கார் உருவாக்கப்பட்டுள்ளது. கார் வகையை பொறுத்து, 6 - ஸ்பீடு மேனுவல், டி.சி.டி., ஆட்டோ, 8 - ஸ்பீடு டி.ஹெச்.டி.,(ஹைபிரிட்) ஆட்டோ கியர் பாக்ஸ்கள் வருகின்றன.
இந்த காரின் சேஸிஸ், 'சி.எம்.பி.,' என்ற உலக உற்பத்தி தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால், கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் பெறும் என கூறப்படுகிறது. ரேஸ் டிராக்கில் ட்யூன் செய்யப்பட்ட இந்த காரின் நம்பகத் தன்மையை சோதிக்க 10 லட்சம் கி.மீ.,க்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.
'டஸ்டர்' பெயர் பொறிக்கப்பட்ட கிரில், ஆப்ரோட் பம்பர்கள், 18 அங்குல அலாய் சக்கரங்கள், அடாஸ் லெவல் - 2 பாதுகாப்பு, 360 டிகிரி கேமரா, 700 லிட்டர் பூட் ஸ்பேஸ், கூகுள் அசிஸ்ட், இரு உட்புற டிஸ்ப்ளேக்கள், பைட்டர் ஜெட் காக்பிட், பவர்டு மற்றும் வென்ட்டிலேட்டட் முன்புற சீட்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் இருக்கின்றன. ஆல் வீல் டிரைவ் அமைப்பு வழங்கப்படவில்லை.

