பல்சர் என்.எஸ்., 400இசட் குயிக் ஷிப்டர் உள்ள முதல் பஜாஜ் பைக்
பல்சர் என்.எஸ்., 400இசட் குயிக் ஷிப்டர் உள்ள முதல் பஜாஜ் பைக்
UPDATED : ஜூலை 16, 2025 11:22 AM
ADDED : ஜூலை 16, 2025 08:05 AM

'பஜாஜ்' நிறுவனம், அதன் 'பல்சர் என்.எஸ்., 400இசட்' ஸ்ட்ரீட் பைட்டர் பைக்கை மேம்படுத்தி, அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலை, 7,000 ரூபாய் உயர்ந்துள்ளது.
கே.டி.எம்., 390 டியூக், பஜாஜ் டாமினார் 400 பைக்குகளில் வரும், அதே 373 சி.சி., சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இன்ஜினின் வால்வ் டிசைன், கேம் டைமிங், பலமான பிஸ்டன், ஏர் இன்டேக் ஆகியவை அதிக பவர் வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
பைக்கின் பவர், 3 ஹெச்.பி., உயர்ந்து, 43 ஹெச்.பி.,யாகவும், அதிகபட்ச ஆர்.பி.எம்., 1,000மாக உயர்ந்து, 10,700 ஆர்.பி.எம்.,மாகவும் உயர்ந்துள்ளது. இது, 100 கி.மீ., வேகத்தை, வெறும் 6.4 வினாடியில் எட்டுகிறது. டாப் ஸ்பீடு, 157 கி.மீ.,ராக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க் 12 லிட்டர், சீட் உயரம் 805 எம்.எம்.,மாக உள்ளது.
'பைடைரக் ஷனல் குயிக் ஷிப்டர்' வழங்கப்படும் முதல் பஜாஜ் பைக்காக, இது விளங்குகிறது. 'எம்.ஆர்.எப்.,' டயர்களுக்கு பதிலாக, அதிக பிடிமானம் வழங்கும் 'அப்பல்லோ ஆல்பா ஹெச் 1' ரேடியல் டயர்கள், பெரிய 150 எம்.எம்., அகலம் கொண்ட பின்புற டயர், நீண்ட காலம் வரும் 'சின்டர்ட்' வகை பிரேக் பேட்கள் ஆகியவை மாற்றப்பட்டுள்ளன. டிசைனில் மாற்றம் இல்லை, வெளிப்புற கிராபிக்ஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

