ADDED : அக் 02, 2024 03:09 PM

'ரிவோல்ட் மோட்டார்ஸ்' நிறுவனம், அதன் புதிய 'ஆர்.வி., 1' என்ற ஆரம்ப விலை மின்சார பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பைக்கை 499 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் வினியோகம் ஒரு வாரத்தில் ஆரம்பமாகும் என இந்நிறுவனம் கூறி உள்ளது.
இது, இந்நிறுவனத்தின் குறைந்த விலை பைக் என்பதால், வெறும் அடிப்படை அம்சங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் பேட்டரி, 2.2 கி.வாட்.ஹார்., மற்றும் 3.24 கி.வாட்.ஹார்., ஆகிய இரு வகையில் வருகிறது. இதன் சார்ஜிங் நேரம், 2 மணி நேரம் 15 நிமிடங்களும், 3 மணி நேரம் 30 நிமிடங்களும் ஆகும். இதன் ரேஞ்ச், 100 கி.மீ., மற்றும் 160 கி.மீ.,ராக உள்ளது.
மின்சார பைக்குகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் பெல்ட் டிரைவ் அமைப்புக்கு பதிலாக, செயின் டிரைவ் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. மேலும், ரிவர்ஸ் மோடு, இரு 240 எம்.எம்., டிஸ்க்குகள், எல்.இ.டி., லைட்டுகள், 6 அங்குல டிஜிட்டல் எல்.சி.டி., டிஸ்ப்ளே உள்ளிட்ட அம்சங்களும் இதில் உள்ளன.