ராயல் என்பீல்டு கிளாசிக் 350 கூடுதல் அம்சங்கள், புதிய நி றங்கள்
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 கூடுதல் அம்சங்கள், புதிய நி றங்கள்
ADDED : ஆக 21, 2024 09:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ராயல் என்பீல்டு' நிறுவனம், அதன் 'கிளாசிக் 350' பைக்கை புதுப்பித்து, மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளது.
இம்முறை கூடுதல் அம்சங்களுடன், 11 புதிய நிறங்களில் இந்த பைக் வந்துள்ளது.
இந்த பைக், அதே ரெட்ரோ கிளாசிக் டிசைனில் இருந்தாலும், முழு எல்.இ.டி., லைட்டுகள், அட்ஜெட்ஸ்டபில் கியர் மற்றும் பிரேக் லிவர், கியர் இண்டிகேட்டர் வசதி மற்றும் யு.எஸ்.பி., சார்ஜிங் அமைப்பு ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
மற்றபடி, இந்த பைக்கில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை. இதன் விலை செப்டம்பர் 1ம் தேதி அறிவிப்பதாக என்பீல்டு நிறுவனம் கூறி உள்ளது.