ஸ்கோடா 'ஆக்டாவியா ஆர்.எஸ்.,' கார் பிரியர்களின் 'மோஸ்ட் வான்டட் செடான்'
ஸ்கோடா 'ஆக்டாவியா ஆர்.எஸ்.,' கார் பிரியர்களின் 'மோஸ்ட் வான்டட் செடான்'
UPDATED : அக் 22, 2025 08:21 AM
ADDED : அக் 22, 2025 08:05 AM

'ஸ்கோடா' நிறுவனம், 'ஆக்டாவியா ஆர்.எஸ்.,' என்ற ஸ்போர்ட்ஸ் செடான் காரை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு அறிமுகம் செய்துள்ளது. 4.7 மீ நீளம் உள்ள இந்த கார், இறக்குமதி முறையில் விற்பனையாகிறது. முதற்கட்டமாக, இந்தியாவுக்கு 100 கார்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த கார், 'கோல்ப் ஜி.டி.ஐ.,' காரில் வரும் அதே 'இஏ888' என்ற 2 லிட்டர், 4 - சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜினில் வருகிறது. 100 கி.மீ., வேகத்தை 6.4 வினாடியில் எட்டுகிறது. இதன் டாப் ஸ்பீடு 250 கி.மீ.,ராக உள்ளது. இந்த இன்ஜின், 7 - ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது.
![]() |
காற்றை எளிதாக கிழித்து வேகமாக பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரில், ஸ்போர்ட்ஸ் பம்பர்கள், 19 அங்குல 'ஏரோ' அலாய் சக்கரங்கள், பின்புற ஸ்பாய்லர், ஸ்போர்ட்ஸ் சீட்டுகள் மற்றும் ஸ்டீயரிங், டூயல் டிஸ்ப்ளே, 11 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, பவர்டு மற்றும் ஹீட்டட் சீட்கள், 3 - ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், மேட்ரிக்ஸ் எல்.இ.டி., லைட்டுகள் உள்ளிட்ட அம்சங்கள் கிடைக்கின்றன.
பாதுகாப்புக்கு, 10 காற்று பைகள், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஏ.பி.எஸ்., இ.எஸ்.சி., உள்ளிட்டவை வருகின்றன. இந்த கார், மொத்தம் ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.