ADDED : டிச 10, 2025 08:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செக் குடியரசு நாட்டை சேர்ந்த 'ஸ்கோடா' நிறுவனம் இந்தியாவில் அறிமுகமாகிய 25ம் ஆண்டில், 5 லட்சம் கார்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டி உள்ளது.
இந்நிறுவனத்தின் நவம்பர் மாத விற்பனை, 90 சதவீதம் அதிகரித்து, 5,491 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டு விற்பனை, வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் செடான் கார் விற்பனையில், இந்நிறுவனத்தின் 'ஸ்லாவியா' மற்றும் 'ஆக்டாவியா' கார்கள் முக்கிய பங்காற்றுகின்றன. 'கைலாக்', 'குஷாக்', 'கோடியாக்' ஆகிய கார்கள், எஸ்.யூ.வி., பிரிவில் விற்பனையாகின்றன. அடுத்த ஆண்டில், மேம்படுத்தப்பட்ட 'குஷாக்', 'ஸ்லாவியா' மற்றும் 'என்யாக்' என்ற இந்நிறுவனத்தின் முதல் இ.வி., கார் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

