ADDED : அக் 16, 2024 08:26 AM

'ஸ்வராஜ் டிராக்டர்ஸ்' நிறுவனம், 'டார்கெட் 625' என்ற அதன் புதிய இலகுரக டிராக்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, 2 - வீல் மற்றும் 4 - வீல் டிரைவ் ஆகிய இரு வகையில் வந்துள்ளது.
இந்த இலகுரக டிராக்டர் விவசாய நிலங்களுக்கு உரம் தெளிப்பது, நிலத்தை உழுதல், பயிர் பராமரிப்பு உள்ளிட்ட மதிமான பணிகளை செய்ய முடியும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள, 3 சிலிண்டர், டீசல் இன்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளதால், 10 என்.எம்., டார்க் அதிகரித்துள்ளது. இது, 980 கிலோ வரை எடை உள்ள விவசாய உபகரணங்களை கூட எளிதாக தாங்கிச் செல்லும்.
மிக குறுகிய இடங்களில் பணிகளை மேற்கொள்ள, 28, 32 அல்லது 36 அங்குலத்தில் டிராக்டர் பாதை அகலத்தை மாற்றிக்கொள்ளலாம். கூடுதல் இன்ஜின் கூலிங்கிற்காக 'மேக்ஸ் கூல் ரேடியேட்டர்', மென்மையான 'கான்ஸ்டன்ட் மெஷ்' கியர் பாக்ஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், நவீன ஹைட்ராலிக்ஸ் அமைப்பு, குறைவான டர்னிங் ரேடியஸ் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள்.