ஸ்விட்சு 'இ.ஐ.வி., - 9' 9 மீட்டர் இ.வி., பஸ், 39 பேர் பயணிக்கலாம்
ஸ்விட்சு 'இ.ஐ.வி., - 9' 9 மீட்டர் இ.வி., பஸ், 39 பேர் பயணிக்கலாம்
ADDED : ஆக 04, 2026 10:00 PM

'ஸ்விட்சு மொபிலிட்டி' நிறுவனம், 'இ.ஐ.வி., - 9' என்ற ஒன்பது மீட்டர் நீளம் உள்ள மின்சார தாழ்தள பஸ்சை அறிமுகம் செய்துள்ளது. இந்த பஸ், பள்ளி, கல்லுாரி, ஊழியர்கள் நகர்ப்புற போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ்சின் பயன்பாட்டை பொறுத்து, 31 முதல் 39 பேர் வரை பயணம் மேற்கொள்ளலாம், ரேஞ்ச் மற்றும் பேட்டரி தொடர்பான தகவல்களை இந்நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், குறைந்தபட்சம் ஒரு முழு பேட்டரி சார்ஜில், 180 முதல் 250 கி.மீ., வரை பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் வழங்கப்படும் மோட்டார், 286 ஹெச்.பி., பவரை வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள லித்தியம் அயான் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய, டூயல் கன் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் உள்ளது. உட்புறத்தில், புஷ் பேக் சீட்கள், யூ.எஸ்.பி., சார்ஜிங் போர்ட், ஏர் சஸ்பென்ஷன்கள், டிஸ்க் பிரேக்குகள், தீயணைப்பு பாதுகாப்பு அமைப்பு என பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
