3.4 கி.வாட்.ஹார்., பேட்டரியுடன் வரும் 'விடா வி.எக்ஸ்., 2 கோ' ஸ்கூட்டர்
3.4 கி.வாட்.ஹார்., பேட்டரியுடன் வரும் 'விடா வி.எக்ஸ்., 2 கோ' ஸ்கூட்டர்
ADDED : நவ 12, 2025 07:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், 3.4 கி.வாட்.ஹார்., பேட்டரி ஆற்றல் கொண்ட 'விடா வி.எக்ஸ்., 2 கோ' என்ற மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை 1.02 லட்சம் ரூபாயாகவும், வாடகை பேட்டரி முறையில், 60,000 ரூபாயாகவும் உள்ளது.
இந்த ஸ்கூட்டர், 2.2 கி.வாட்.ஹார்., பேட்டரியில் முன்னதாக அறிமுகமானது. இந்த 3.4 கி.வாட்.ஹார்., பேட்டரி முழு சார்ஜில், 100 கி.மீ., ரேஞ்ச் வழங்குவதாக கூறப்படுகிறது. இதில் இரு பேட்டரிகள் வழங்கப் பட்டுள்ளதால், ஒரு பேட்டரியை வாகனத்தில் இருந்து பிரித்து எடுத்து தனியாக சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
இதில் உள்ள மோட்டார், 8 ஹெச்.பி., பவர், 26 என்.எம்., டார்கை வெளிப்படுத்துகிறது. டாப் ஸ்பீடு 70 கி.மீ., பூட் ஸ்பேஸ் 27.2 லிட்டர் வழங்கப்படுகிறது.

