ஹூண்டாய் 'வென்யூ' எஸ்.யூ.வி., டீசல் இன்ஜினுக்கு ஆட்டோ கியர்பாக்ஸ் அறிமுகம்
ஹூண்டாய் 'வென்யூ' எஸ்.யூ.வி., டீசல் இன்ஜினுக்கு ஆட்டோ கியர்பாக்ஸ் அறிமுகம்
ADDED : நவ 12, 2025 07:53 AM

'ஹூண்டாய்' நிறுவனம், அதன் 'வென்யூ' சப் காம்பேக்ட் எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. '
இது, மென்பொருளில் இயங்கும் இந்நிறுவனத்தின் முதல் கார் ஆகும். இதில், 20க்கும் அதிகமான வாகன கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளதால், ஸ்மார்ட்போன் அப்டேட் போல காரை அப்டேட் செய்யலாம். இதனால், காரின் எலக்ட்ரானிக் குறைகளை எளிதாக நிவர்த்தி செய்து, அம்சங்களை மேம்படுத்தவும், அறிமுகப்படுத்தவும் முடியும்.
இந்த காருக்கு வழங்கப்படும் மூன்று இன்ஜின்கள், கியர்பாக்ஸ்களில் எந்த மாற்றமும் இல்லை. டீசல் இன்ஜினுக்கு 7 - ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோ கியர் பாக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காரின் சேசிஸ் பலப்படுத்தப்பட்டு, வெளிப்புற மற்றும் உட்புற டிசைன் நவீன படுத்தப்பட்டுள்ளது. காரின் அகலம் 30 எம்.எம்., உயரம் 48 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ் 5 எம்.எம்., வீல் பேஸ் 20 எம்.எம்., பூட் ஸ்பேஸ் 25 லிட்டர் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், 12.3 அங்குல டூயல் டிஸ்ப்ளே, 3 - ஸ்டீயரிங் வீல், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ஆட்டோ ஹோல்டு, அலங்கார விளக்குகள், பவர்டு டிரைவர் சீட், வென்ட்டிலேட்டட் முன்புற சீட்கள், 8 - ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புக்கு, 6 காற்று பைகள், அடாஸ் லெவல் - 2 பாதுகாப்பு உள்ளிட்டவை வருகின்றன. இந்த கார், மூன்று புதிய நிறங்கள் உட்பட ஒன்பது நிறங்களில் கிடைக்கிறது.

