இந்திய மின் வாகன சந்தையில் வியட்நாமின் 'வின்பாஸ்ட்'
இந்திய மின் வாகன சந்தையில் வியட்நாமின் 'வின்பாஸ்ட்'
ADDED : ஜன 15, 2025 01:25 PM

வியட்நாமைச் சேர்ந்த 'வின்பாஸ்ட்' நிறுவனம், 'வி.எப்., 3, வி.எப்., - 7, வி.எப்., - 9' ஆகிய மூன்று மின்சார கார்களை அறிமுகப்படுத்தி, முதல் முறையாக இந்திய சந்தைக்குள் நுழைய உள்ளது. இந்த கார்கள், பாரத் மொபிலிட்டி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்நிறுவன ஆலை, தூத்துக்குடியில் அமைந்துள்ளது.
* வி.எப்., - 3: இந்த கார் இரண்டு கதவுகள் கொண்ட நான்கு சீட்டர் எஸ்.யு.வி., காராகும். இது, 3.2 மீட்டர் நீளம் கொண்ட இந்நிறுவனத்தின் சிறிய கார் ஆகும்.
* வி.எப்., - 7: இது நான்கு கதவுகள் கொண்ட ஐந்து சீட்டர் சப் காம்பேக்ட் எஸ்.யு.வி., கார் ஆகும். இதில், 450 கி.மீ., ரேஞ்ச் வழங்கும் 75 கி.வாட்.ஹார்., பேட்டரி பயன்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
* வி.எப்., - 9: இந்த கார் ஆறு மற்றும் ஏழு சீட்டர் எம்.பி.வி., ஆகும். இதில், 531 கி.மீ., ரேஞ்ச் வழங்கும் 123 கி.வாட்.ஹார்., திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.