ஜி.டி.கார் மியூசியத்தில்: காத்திருக்கு ஒரு செம டிரீட்டு!
ஜி.டி.கார் மியூசியத்தில்: காத்திருக்கு ஒரு செம டிரீட்டு!
UPDATED : அக் 26, 2025 09:38 AM
ADDED : அக் 26, 2025 02:51 AM

கோவை ஜி.டி.கார் அருங்காட்சிய கத்தின், 'செயல்திறன் கார் பிரிவு'(Performance cars), உலகின் தலைசிறந்த ஸ்போர்ட்ஸ், சூப்பர், சொகுசு மற்றும் பந்தய கார்கள் அணிவகுப்பை நடத்தி, பார்வையாளர்களின் அட்ரினலினை எகிற செய்கிறது.
வேகத்தின் மறு உருவமான லம்போர்கினி, வாகன உலகின் ஜாம்பவானான பெராரி, அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட மெக்லாரன், லோட்டஸ், மசெராட்டி, மற்றும் அஸ்டன் மார்டின் போன்ற ஜாம்பவான்களின் கார்கள், வரிசையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றுடன், பிரம்மாண்டத்தின் அடையாளமான, ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மற்றும் ஸ்டைலான போர்ஷே பாக்ஸ்டர் போன்ற சொகுசு கார்களும், கண்களை விரியச் செய்கின்றன. பந்தயக் களத்தில் சீறிய ரேஸ் கார்களுக்கும் இங்கு பஞ்சமில்லை.
அசுர வேகத்தில் செல்லும், பார்முலா ஒன் ரேஸ் கார், போர்ஷே 982 மாடலும் இங்கு முக்கிய ஈர்ப்பாக உள்ளன. இந்தியாவின் பந்தய உலகை சேர்ந்த எல்.ஜி.பி. ரோலான், எம்.ஆர்.எப் 2000 போன்ற கார்களுடன், உலகப் புகழ்பெற்ற போர்டு ஜிடி40 மாடலும் காட்சிப்படுத்தப்பட்டு, பந்தய கார் பிரியர்களுக்கு செம டிரீட் தருகிறது.

