ADDED : டிச 10, 2025 08:33 AM

இந்தியாவில் மின்சார கார்களை உற்பத்தி செய்து வரும் 'வின்பாஸ்ட்' நிறுவனம், மின்சார ஸ்கூட்டர் சந்தையிலும் நுழைய திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள், அதன் முதல் மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
வியட்நாம் சந்தையில், 'கிளாரா நியோ', 'வென்ட்டோ எஸ்' உள்ளிட்ட ஆறு இ.வி., ஸ்கூட்டர்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், குறிப்பிட்ட ஸ்கூட்டர்கள் இங்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிறுவனம், உள்நாட்டில் 16,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், தமிழகத்தின் துாத்துக்குடியில், 4,000 கோடி ரூபாய் முதலீடு செய்து, கார் உற்பத்தி ஆலை அமைத்துள்ளது. இங்கு, ஆண்டுக்கு 1.50 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். தற்போது, 'வி.எப்., - 6' மற்றும் 'வி.எப்., - 7' ஆகிய இரு மின்சார எஸ்.யூ.வி., கார்களை, இங்கு விற்பனை செய்து வருகிறது.

