ADDED : மார் 05, 2025 01:19 PM

இந்தியாவுக்கான பிரத்யேக மின்சார வாகனத்தை உருவாக்க ஆய்வு செய்து வருகிறோம், இறுதி முடிவு பேச்சுவார்த்தையில் உள்ளது என, 'யமஹா இந்தியா' தலைவர் இட்டாரு ஒட்டாணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
பொதுவாக, கட்டுமான தளம் அடிப்படையில் தான் மின்சார வாகனங்களை உருவாக்குவோம். அதுவும், இந்திய சந்தைக்கான, பிரத்யேக வாகனத்தை உருவாக்க அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தற்சமயம், இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையில் குறைந்த செயல்திறன் கொண்ட ஸ்கூட்டர்கள் தான் உள்ளன. ஆனால், யமஹா பிராண்டின் கீழ், நாங்கள் அதிக செயல்திறன் கொண்ட ஸ்கூட்டர்களை வடிவமைக்க உறுதியாக உள்ளோம். இந்த வகை ஸ்கூட்டர்களுக்கு, விலை உயர்ந்த பெரிய பேட்டரிகள் தேவை. இந்த சவாலை எதிர்கொள்வது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
இந்திய மின்சார வாகன சந்தைக்கான யமஹாவின் திட்டம் தயாராக உள்ளது. இதுகுறித்து, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.