/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
சிறுவாணி மெயின் ரோடு அருகே 6 சென்ட் இடத்தை என்ன விலை கொடுத்து வாங்கலாம்?
/
சிறுவாணி மெயின் ரோடு அருகே 6 சென்ட் இடத்தை என்ன விலை கொடுத்து வாங்கலாம்?
சிறுவாணி மெயின் ரோடு அருகே 6 சென்ட் இடத்தை என்ன விலை கொடுத்து வாங்கலாம்?
சிறுவாணி மெயின் ரோடு அருகே 6 சென்ட் இடத்தை என்ன விலை கொடுத்து வாங்கலாம்?
ADDED : மார் 01, 2025 06:12 AM

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ரோடு, வேலன் ஹோட்டலுக்கு பின்புறம், 70 சென்ட் இடம், அதில் கட்டியுள்ள, 9,000 சதுரடி கொண்ட தொழில்நிறுவனம் விற்பனைக்கு வருகிறது. என்ன விலைக்கு வாங்கலாம்.
-கோபிநாத், திருப்பூர்.
இடமானது திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்டது. ரோட்டின் அகலம் குறிப்பிடப்படவில்லை. 30 அடி அகலத்திற்கு குறையாமல் இருக்குமானால், லே-அவுட் போட இயலும். அவ்வாறு, ஷெட்டை பிரித்து விற்றுவிட்டு, காலியிடத்தை மனைகளாக பிரிக்கலாம்.
கோவை மாவட்டம், சோமனுாரில் சங்கீதா ஹோட்டலில் இருந்து, 750 மீட்டர் பின்புறம், 20 அடி தடத்தில், 33 சென்ட் இடமும், 7,000 சதுரடி கட்டட அனுமதி பெற்ற குடோன் விலைக்கு வருகிறது. என்ன விலை கொடுத்து வாங்கலாம்.
-- கார்மேகம், கோவை.
தாங்கள் கூறியுள்ள இடம், இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வீடுகள் நிறைந்த பகுதி. ரோட்டின் அகலம், 20 அடிதான் உள்ளது. பெரிய கனரக வாகனங்கள் வந்துசெல்வது கடினம். ஆகவே, மேற்படி காரணங்களால் மொத்த மதிப்பு ரூ.3 கோடியாகும்.
கோவை, வடவள்ளி கிராமத்தில், மாநகராட்சிக்கு உட்பட்ட சிறுவாணி மெயின் ரோடு அருகே சுமார், 6 சென்ட் இடம் விலைக்கு வருகிறது. என்ன விலை கொடுத்து வாங்கலாம்.
-அஜிதா ரகுமான், கோவை.
தாங்கள் கூறிய இடம் பள்ளி, கல்லுாரிகள் சூழ்ந்த இடம். அகலமான ரோடு இருப்பதால் வீடு கட்டவும் ஏதுவானது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்டதால், சென்ட் ஒன்றுக்கு ரூ.15 லட்சம் பெறும்.
நான் ஒரு மனைப்பிரிவில், கட்டடத்துடன் கூடிய வீட்டை விலைக்கு வாங்க உத்தேசித்துள்ளேன். விற்பவரிடம் இருந்து என்னென்ன ஆவணங்களை, கேட்டுப்பெற வேண்டும்.
-கவுதம், கோவை.
நீங்கள் விற்பவரிடம் 'டோக்கன் அட்வான்ஸ்' கொடுக்கும் பொழுது, அம்மனையின் சேல் டீட், பேரன்ட் டீட், சர்ட்டிபைடு டீட், மனைப்பிரிவு அங்கீகார வரைபடம், நடவடிக்கைகள், பட்டா, டி.எஸ்.எல்.ஆர்., குடிநீர் வரி, மின் கணக்கீட்டு அட்டை, ரசீது போன்ற ஆவணங்களை கேட்டுப்பெற வேண்டும்.
சிலர் சமீபத்திய ஆவணத்தை மட்டுமே கொடுத்துவிட்டு, பிறகு ஆவணங்களை கேட்கும்பொழுது, தேடி வாங்கித்தர சோம்பல்படுவர். சில சமயங்களில் வாங்குபவர், டோக்கன் அட்வான்சையே இழக்க நேரிடும். இதுபோன்ற இழப்புகளை தவிர்க்க, தேவையான அனைத்து ஆவணங்களையும் வாங்கிவிட்டு, 'டோக்கன் அட்வான்ஸ்' கொடுக்கவும்.
தகவல்: ஆர்.எம்.மயிலேரு,
கன்சல்டிங் இன்ஜினியர்.