sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

ஆலோசனை

/

நுழைவாயிலை வசீகரிக்கும் 'கொடுங்கை' கட்டுமானம்; எத்தனை அடி வரை நீட்டுவது பாதுகாப்பானது?

/

நுழைவாயிலை வசீகரிக்கும் 'கொடுங்கை' கட்டுமானம்; எத்தனை அடி வரை நீட்டுவது பாதுகாப்பானது?

நுழைவாயிலை வசீகரிக்கும் 'கொடுங்கை' கட்டுமானம்; எத்தனை அடி வரை நீட்டுவது பாதுகாப்பானது?

நுழைவாயிலை வசீகரிக்கும் 'கொடுங்கை' கட்டுமானம்; எத்தனை அடி வரை நீட்டுவது பாதுகாப்பானது?


ADDED : ஆக 01, 2025 07:53 PM

Google News

ADDED : ஆக 01, 2025 07:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நான் புதிதாக வீடு கட்டி வருகிறேன். சாலை மட்டத்திலிருந்து மூன்று அடிஉயரத்தில் 'பேஸ்' மட்டம் அமைகிறது. வாசலில் இரண்டு பெரிய கடைகள் அமைகின்றன. இதனால் கட்டடத்தின் வெளிப்பக்கம் படிக்கட்டு ஒட்டி, திண்ணை நடை மேடை போன்ற அமைப்பு உருவாகிறது. இதன் நீளம், 12 அடி, அகலம், 2.5 அடி, உயரம் 3 அடி. இந்த திண்ணையை நிரப்ப, மணலுக்கு பதிலாக, பழங்கட்டட பொருட்களை பயன்படுத்தலாமா?

-ஜாஹிர் உசேன், கோவை.

திண்ணையை நிரப்புவதற்கு, பழங்கட்டட வீண் பொருட்களான உடைந்த செங்கல் உள்ளிட்டவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. கல்லுடைத்துாள், செஞ்சரளை (கிராவல்) மண், 1:3 என்ற விகிதத்தில் கலந்து, குறைவாகத் தண்ணீர் ஊற்றி மூன்று அடுக்குகளாக நிரப்பி நன்றாகக் கெட்டிப் படுத்த வேண்டும்.

செஞ்சரளை மண் கிடைக்காத போது, கல்லுடைத்துாள், சிமென்ட், 10:1 என்ற விகிதத்தில் கலந்து நிரப்பிக் கெட்டிப்படுத்த வேண்டும். கட்டட மேற்பார்வையாளர் சொல்கிறார் என்பதற்காக, உடைக்கப்பட்ட செங்கல் கட்டுமான வீண் பொருட்களை நிரப்புவதற்கு (அடித்தளத்திலும் கூட) கண்டிப்பாகப் பயன்படுத்தாதீர்கள்.

நம்மூரில் அவ்வளவாக 'கான்டிலிவர்' கட்டு மானங்கள் இல்லை. ஒரு சாதாரண கட்டடத்தில் கான்கிரீட் நீட்டல் எத்தனை அடி நீளத்திற்கு அமைதல் பாதுகாப்பானது? நான் படிக்கும் கல்லுாரியின் சிவில் இன்ஜி., துறை பேராசிரியர், 9 அடி நீளம் வரை நீட்டலாம் என்கிறார்.

--ரேஷ்மி, கோவை.

தமிழ்நாட்டில் கொடுங்கை கட்டுமானங்கள் (கான்டிலிவர்) நிறையவே இருக்கின்றன. பெரும்பாலான அரசுக் கட்டடங்களிலும், பெரிய பொறியியல் கல்லுாரிகளிலும் நுழைவாயில்களில் கொடுங்கை கட்டுமானங்களைக் காணலாம். கான்கிரீட் கட்டுமானங்களில், 5 மீ., முதல் 10 மீ., வரை கொடுங்கைக் கட்டுமானங்களை பாதுகாப்பாக நீட்டலாம்.

எக்கு உறுப்புகளைக் கொண்டு, 20 மீ., வரை கூட நீட்ட முடியும். நம்முடைய ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடை கூரைகளைப் பாருங்கள். என்னுடைய வீட்டில் கொடுங்கை விட்டப்பலகம் ஒன்று, 3.20 மீ., நீளத்தில் (3 வாகனங்கள் நிற்கும் அளவில்) நுழைவு வாயில் உள்ளது.

சென்னை அம்பத்துாரில் இந்தியா லேண்ட் டவர்ஸ் என்ற கட்டடத்தில் எக்கு உறுப்புகளைக் கொண்டு, 10 மீ.,(32 அடி) நீளத்திற்கு கொடுங்கை நுழைவு வாயில், எங்களால் வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்டுள்ளது.

ஆனால், இத்தகைய கொடுங்கை அமைப்புகளை தகுதி வாய்ந்த, திறமையுள்ள கட்டுமான வடிவமைப்பாளர்களைக் கொண்டுதான், வடிவமைத்துக் கட்ட வேண்டும்.

எங்கள் வீட்டின் முதல் தளத்திற்கு, பால்கனி பகுதியில் கண்ணாடியால் அமைக்க ஆசையாக இருக்கிறது. என் மனைவி கிரில் தான் பொருத்தப்பட வேண்டும் என்கிறார். கண்ணாடி பாதுகாப்பானதில்லை என்கிறார்கள். விளக்கவும்.

-ராஜகோபால், சரவணம்பட்டி.

உங்கள் வீட்டின் முதல் தளத்தில், பால்கனி கைப்பிடிச் சுவரை கண்ணாடியில் சுட்டுவது பாதுகாப்பாக இருக்காது. முதல்தர கண்ணாடியாக இருந்தாலும் கூட, உங்கள் மனைவி சொல்வது போல, எக்குக் கம்பிகளால் உருவாக்கப்பட்ட, 'ஸ்டீல் ஜெல்'தான் பாதுகாப்பானது. செலவும் குறைவானது.

பெர்ரோ சிமென்ட் கட்டுமானத்திற்கும், ஜி.எப்.ஆர்.ஜி., பலகை கட்டுமானத்திற்கும் என்ன வேறுபாடு? எது சிறந்தது?

-பிரபாகரன், கோவை.

பெர்ரோ சிமென்ட் கட்டுமானத்தில் சிமென்ட் கலவை, எக்குக் கம்பிவலை மற்றும் கோழி வலை முதலியவை கலந்து கட்டப்படுகிறது. இதில், காலப்போக்கில் விரிசல்கள் விழவும், மழை பெய்தால் துருப்பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.ஆனால் செலவு குறைவு. ஜி.எப்.ஆர்.ஜி., பலகை கட்டுமானத்தில் உறுதியூட்டப்பட்ட கண்ணாடி இழைகள் மற்றும் ஜிப்சம் கலவை சேர்த்து கட்டப்படுகிறது. செலவு மிகுதியானது. பெர்ரோ சிமென்ட் கட்டுமானத்தை விட உறுதியானது. நீடித்து உழைக்கும்.

கட்டட முகப்பு பணிக்கு, 'மெயின் ராடு' 10 மி.மீ., 'டிஸ்ட்ரிபியூட்டர் ராடு' 8 மி.மீ., உபயோகப்படுத்தி, சிமென்ட் கலவை, 1:2ல் கலவை பூசியாகி விட்டது. இரண்டு வருடங்களுக்கு பிறகு இப்போது, அதன் பிளாஸ்டரிங் வருகிறது. 'கிராக்' வராமல் இருக்க, என்ன செய்ய வேண்டும்.

-முத்து குமார், ராமநாதபுரம்.

சிமென்ட் மிகுதியாக உள்ள கலவை, 1:2 பயன்படுத்தப்படுவதால் மேலும் சுருக்க விரிசல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. மழைக் காலங்களில் தண்ணீரை மேற்பரப்பு மெத்தல் முறையில் உறிஞ்சவும் வாய்ப்பு உள்ளது. இதனாலும் விரிசல்கள் வருகின்றன.

செயற்கை நெகிழி இழையான 'ரெக்ரான் 3S' கலந்து பூசினால் இந்த விரிசல்களைத் தடுக்க முடியும். சிமென்ட் கலவை, 1:2 பதிலாக மைக்ரோ கான்கிரீட் கொண்டு மெத்தினாலும் விரிசல்களை தடுக்கலாம்.

-ஜோசப்

தலைவர், அகில இந்திய கட்டுநர் சங்கம்,

கோவை மையம்.






      Dinamalar
      Follow us