/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
ஒரே மனையில் இரு வீடு கட்டலாமா?
/
ஒரே மனையில் இரு வீடு கட்டலாமா?
ADDED : மார் 23, 2024 01:31 AM

வீடு கட்டும் போது தடை ஏற்படாமல் இருக்க, வீடு கட்ட வாங்கிய கட்டுமான கற்களில் சிறிய ஜல்லிக்கல் ஒன்றை எடுத்து, சுத்தப்படுத்தி அதை ஐயப்பன் கோவில் அல்லது பூவராக பெருமாள் கோவிலுக்கு சென்று கொடுப்பார்கள்.
சுவாமி பாதத்தில் வைத்து ரிக் வேதத்தின் சுருக்கத்தை சொல்லி, பாராயணம் செய்து பூஜை செய்து கொடுப்பார்கள்.
அந்த ஜல்லிகல்லை, வீடு கட்டும் அஸ்திவாரத்தின் ஈசானிய மூலையில் வைத்து அதற்கு மேல் கட்டடம் கட்டினால், எவ்வித பிரச்னைகளும் இன்றி, தீய சக்திகளின் தாக்குதல் இன்றி, வீடு கட்டும் பணி சிறப்பாக துவங்கி நிறைவடையும் என்பது நம்பிக்கை.
வீடுகளுக்கான வாஸ்து தகவல்கள்
* வீட்டுத் திண்ணைகள் வடக்கேயும், கிழக்கேயும் உயரமாக அமைக்கக் கூடாது.
* வடக்கு, கிழக்கு காம்பவுண்டு சுவரின் மேல் பூந்தொட்டி வைக்கக் கூடாது.
* வீட்டின் தென்மேற்கு மூலையில் மெயின்கேட், போர்டிகோ தலைவாசல் மற்றும் கிணறு அமைந்திருந்தால், வேதனைகளும் சோதனைகளும் வரும். அதனால் அப்பகுதிகளில் அமைப்பதை தவிர்ப்பது நல்லது.
* வீட்டு வாசலுக்கு எதிரே கிணறோ, குழியோ இருக்கக்கூடாது.
* வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள காலிமனை நிலங்களை வாங்கலாம்.
* வீட்டின் தெற்கு, மேற்கு பகுதியில் உள்ள காலிமனையை இனாமாகக் கூட வாங்கி சேர்க்கக் கூடாது.
* ஒரு வீட்டினை இருவருக்கு பங்கிட்டு, பாகப்பிரிவினைச் செய்ய கூடாது.
* ஒரே மனையில், இரண்டு வீடுகள் கட்ட விரும்பினால் முதலில், தெற்கு அல்லது மேற்கு பகுதியில் கட்ட வேண்டும். பிறகு தான் வடக்கு அல்லது கிழக்கிலுள்ள, காலி மனையில் வீடு கட்ட வேண்டும்.
* ஒரே மனையில் 2 வீடுகள் கட்டினால், தெற்கிலுள்ள வீட்டை விட வடக்கில் உள்ள வீடு தாழ்வாகவும், மேற்கில் உள்ள வீட்டை விட, கிழக்கில் உள்ள வீடு தாழ்வாகவும் இருக்க வேண்டும்.
* வீடு பழுது பார்க்கும் பணிகளை, மெதுவாகச் செய்தாலும் பரவாயில்லை. பாதியில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்.
* வீடு கட்ட ஆரம்பிக்கும் முன், அல்லது செப்பனிட ஆரம்பிக்கும் முன் சரியான நேரத்தில் அருகம்புல், துளசி கொண்டு மனையின் ஈசானியத்தில் வாஸ்து பூஜை (பூமி பூஜை) செய்தல் நல்லது.

