sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

ஆலோசனை

/

கட்டட மேற்கூரை சிமென்ட் கலவை பூச்சில் வெடிப்பு; மழைக்காலத்தில் நீர் கசிவு தடுக்க பொறியாளர் அறிவுரை

/

கட்டட மேற்கூரை சிமென்ட் கலவை பூச்சில் வெடிப்பு; மழைக்காலத்தில் நீர் கசிவு தடுக்க பொறியாளர் அறிவுரை

கட்டட மேற்கூரை சிமென்ட் கலவை பூச்சில் வெடிப்பு; மழைக்காலத்தில் நீர் கசிவு தடுக்க பொறியாளர் அறிவுரை

கட்டட மேற்கூரை சிமென்ட் கலவை பூச்சில் வெடிப்பு; மழைக்காலத்தில் நீர் கசிவு தடுக்க பொறியாளர் அறிவுரை


ADDED : பிப் 21, 2025 11:27 PM

Google News

ADDED : பிப் 21, 2025 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எங்கள் வீட்டின் தரைதள கூரை கான்கிரீட் மற்றும் செங்கல் சுருக்கி தளம் கடந்த, 1988ம் ஆண்டிலும், முதல்தள கூரை கான்கிரீட் மற்றும் செங்கல் சுருக்கி தளம், 2005ம் ஆண்டும் கட்டப்பட்டது. இதுவரை கூரைகளில் இருந்து நீர் ஒழுகவில்லை. ஆனால், மேலே போடப்பட்ட சிமென்ட் கலவை பூச்சில் விரிசல்கள் உள்ளன. ஏதேனும் லீக்கேஜ் பிரச்னை எதிர்காலத்தில் வருமா?

-மாணிக்கம், கோவை.

சிமென்ட் கலவை பூச்சில் உள்ள, விரிசல்கள் மூலம் எதிர்காலத்தில் லீக்கேஜ் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கையாக அந்த விரிசல்களில், 'கட்டிங் மெஷின்' கொண்டு ஆழமாக கீறி விட வேண்டும். அந்த கீறல்களின் உள்ளே வெடிப்பு சரிசெய்யும், கெமிக்கல் கொண்டு நன்றாக பேக் செய்ய வேண்டும்.

பிறகு பி.வி., மற்றும் அக்ரிலிக் பேஸ்ட் இரண்டையும் தண்ணீருடன் கலந்து, பிரைமர் போல ஒரு முறையும், தண்ணீர் கலக்காமல் இரண்டு முறையும் அடித்து விடவும். இந்த பேஸ்ட் வெள்ளை மற்றும் டெரகோட்டா நிறங்களில் கிடைக்கிறது. இதற்கு சுமார் ரூ.30 ஒரு சதுரடிக்கு செலவாகும்.

எங்களது, 10 அடி நிலத் தொட்டியில் இரண்டு வருடங்களுக்கு மேலாக, தண்ணீர் வடிந்து வெளியாகி வருகிறது. தொட்டியின் உட்பகுதியில் உள்ள நான்கு ஓரங்களில் மட்டும் வெடிப்பு இருந்தது. வெடிப்பு இருந்த பகுதி மட்டும் கொத்தி விடப்பட்டு, சிமென்ட் மற்றும் எம்.சாண்ட் கலந்து பூசினோம். ஆனால், திரும்பவும் தண்ணீர் வருகிறது. தடுக்க ஏதும் வழிகள் உண்டா?

-ரவிக்குமார், கோவை.

நிலத்தொட்டியின் அளவுகள் சரியாக சொல்லவில்லை. செங்கல் மற்றும் கான்கிரீட்டினால் கட்டப்பட்டுள்ளதா என்பதையும் குறிப்பிடவில்லை. 10 அடி ஆழத்தொட்டி செங்கலினால் கட்டப்பட்டு இருந்தாலும், அருகில் உள்ள மரத்தின் வேர்கள் அஸ்திவாரத்தின் அருகாமை இருப்பது உள்ளிட்ட காரணங்களால், வெடிப்புகள் வருகின்றன.

வெடிப்புகளை கட்டிங்மெஷின் கொண்டு, நன்றாக ஆழமாக கீறி விட்டு, வெடிப்புகள் சரிசெய்யும் கெமிக்கல்கள் கொண்டு பூசி சரி செய்து விட வேண்டும். பிறகு நிலத்தொட்டிக்கு 'எபாக்ஸி வாட்டர் பேஸ்' கொண்டு இரண்டு முறை, 12 மணி நேரம் இடைவெளி விட்டு அடித்து விடவும். 'வாட்டர் புரூப் பெயின்ட்' போன்றவை சரியான தீர்வு கிடைக்காது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, எங்களது வீட்டுக்கு ஆர்.சி.சி., சிலாப் கான்கிரீட் கூரை போடப்பட்டது. கான்கிரீட் முடியும் தருவாயில், பலத்த மழை எதிர்பாராமல் கொட்டி கான்கிரீட்டின் மேல் இருந்த சிமென்ட் கலவை எல்லாம் கரைந்து, ஜல்லி ஜல்லி ஆக காட்சியளித்தது. எங்களது பொறியாளரும், மேஸ்திரியும் சேர்ந்து சிமென்ட் பால் போல் கரைத்து ஊற்றினால் சரியாகும் என்று சொல்லி செய்தார்கள். இது சரியான முறையா?

-சிவக்குமார், கோவை.

கான்கிரீட்டின் உறுதித்தன்மை கான்கிரீட் போட்ட, 30 நிமிடங்களில் ஆரம்பமாகிவிடும்.

சிமென்ட் பால் போல கரைத்து ஊற்றுவது, ஓரளவுக்கு சரியானது என்றாலும் முறையான தீர்வு இல்லை.

சிமென்ட் கலவை கரைத்து, ஜல்லியாக தெரியும் இடங்களில் கான்கிரீட்டை நன்றாக ஆழமாக கீறி விட வேண்டும். அதனுள்ளே சிமென்ட் பால் மற்றும் 'பாண்டிங் கெமிக்கல்ஸ்' சரியாக கலவையில் கலந்து ஊற்றிவிட வேண்டும். பின், முறையாக தண்ணீரை பாத்தி கட்டி நிறுத்தி கியூரிங் செய்யலாம்.

- கணேசமூர்த்தி,

நிரந்தர உறுப்பினர்,

பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, கோவை மையம்.






      Dinamalar
      Follow us