/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து 1 கி.மீ.,ல் உள்ள வீட்டை என்ன விலைக்கு வாங்கலாம்?
/
மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து 1 கி.மீ.,ல் உள்ள வீட்டை என்ன விலைக்கு வாங்கலாம்?
மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து 1 கி.மீ.,ல் உள்ள வீட்டை என்ன விலைக்கு வாங்கலாம்?
மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து 1 கி.மீ.,ல் உள்ள வீட்டை என்ன விலைக்கு வாங்கலாம்?
ADDED : செப் 12, 2025 10:16 PM

கோவை மாவட்டம், இருகூர் கிராமத்தில் இருகூர் டவுனில் சுமார் நான்கு சென்ட் காலியிடம் (நத்தம் இடத்தில்) விற்பனைக்கு வருகிறது. என்ன விலை கொடுத்து வாங்கலாம்?
-கவிதா, இருகூர்.
இருகூர் என்பது வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் ஒரு சேட்டிலைட் நகராக, அதாவது திருச்சி ரோடு மற்றும் அவிநாசி ரோடு இரண்டுக்கும் இடையில் அமைய உள்ள குடியிருப்பு மற்றும் சிறு குறு தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக மாறிக்கொண்டிருக்கிறது. காலியிடம் அமைந்துள்ள ரோட்டின் அகலத்தை பொறுத்து, சென்ட்க்கு ரூ.15 லட்சம் வரை விலை கொடுக்கலாம்.
கோவை மாவட்டம், காந்திபுரத்தில் எங்களுக்கு சொந்தமான ஐந்து சென்ட் இடத்தில், இரண்டு சென்ட் இடம், 20 அடி ரோட்டில் எனக்கு பாகமாய் உள்ளது. இதில் கட்டடம் கட்ட எண்ணியுள்ளேன். சப்-டிவிஷன் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்?
-விஸ்வநாதன், காந்திபுரம்.
'உட்பிரிவுடன் கூடிய மனைப்படம்' என்ற விண்ணப்பத்தை, இ-சேவை மையம் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும். உங்கள் பாகப்பத்திரம், மூலப்பத்திரம், அதற்குள்ள தற்போதைய டி.எஸ்.எல்.ஆர்., இதர சொத்து வரி ரசீது ஆகியவற்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இ-சேவை மையத்தின் ரசீதுடன், அந்த நகல்களுடன் மத்திய மண்டலம் நகர அளவையர் அலுவலகத்தை அணுகி, இந்த நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி நகர அளவையர் நாளடைவில், தங்கள் இடத்தை வந்து பரிசீலித்து அளந்து, பத்திரத்தில் கண்ட அளவுகளை நிலையில் உள்ள அளவுகளுடன் ஒப்பிட்டு, சரியான அளவுக்கு பிரித்து தனி டி.எஸ்.எல்.ஆர்., தர ஆவணசெய்வார்.
கோவை மாவட்டம், குருடம்பாளையம் கிராமம், என்.ஜி.ஜி.ஓ., காலனியில் (மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து, 1 கி.மீ.,), அடுக்குமாடி குடியிருப்பு, மொத்த தளம் நான்கு, 12 வீடுகள், கடந்த, 2011ல் கட்டியது. கட்டட பகுதி, 1050 சதுரடி, யு.டி.எஸ்., 450 சதுரடி என விற்பனைக்கு வருகிறது. என்ன விலைக்கு வாங்கலாம்?
-வைரவன், கோவை.
தாங்கள் கூறும் என்.ஜி.ஜி.ஓ., காலனி என்பது குருடம்பாளையம் கிராமத்தில் பிரபலமானது. சாய்பாபா காலனி மேம்பாலமும், துடியலுார் சந்திப்பு மேம்பாலமும் கட்டி முடியும்போது, இந்த காலனியின் மரியாதை மிகவும் கூடிவிடும்.
கோவை - மேட்டுப்பாளையம் வழியில் மின்சார ரயில் ஆரம்பிக்கும்போது சொல்லவே வேண்டாம். 15 வருடங்களில், 40க்கும் மேற்பட்ட அபார்ட்மென்ட்கள் கட்டியுள்ளார்கள். வாடகை சுமார் ரூ.10 ஆயிரம் முதல், 11 ஆயிரம் வரும் எனில், இதன் மதிப்பு ரூ.40 முதல், 45 லட்சம் பெறும்.
-தகவல்:
ஆர்.எம்.மயிலேறு,
கன்சல்டிங் இன்ஜினியர்.