பால்கனியில் பறவைகள் தொல்லை பாதுகாப்பதற்கு பொறியாளர் ஐடியா
பால்கனியில் பறவைகள் தொல்லை பாதுகாப்பதற்கு பொறியாளர் ஐடியா
ADDED : ஜூன் 12, 2026 04:10 PM

* எங்கள் வீட்டில் மொட்டை மாடி கைப்பிடி சுவரில் ‘கிராக்’ தடுக்க என்ன செய்ய வேண்டும்?
–தங்கவேல்: கைப்பிடி சுவர் கட்டிய பிறகு மேலே ‘சில்க் கான்கிரீட்’ போட வேண்டும். பின்பு மழை தண்ணீர் வடிய உள்புற வாட்டம் வைத்து பூச வேண்டும். அப்போது தண்ணீர் கைப்பிடி சுவரின் மேல் நிற்காமல் வடிந்து விடும். இப்படி செய்தால் கிராக் வராது.
* அபார்ட்மென்டில் மூன்றாவது மாடி பால்கனியில் பறவைகள் தொல்லை உள்ளது. சமாளிக்க என்ன செய்வது?
–பிரசாத்: இப்போது இதுபோன்ற இடங்களில் பொருத்துவதற்கென்றே ‘இன்விசிபிள் கிரில்’ உள்ளது. நாம் கீழே இருந்து பார்த்தால் பொருத்தியதே தெரியாது. வலிமையாகவும் இருக்கும். ஏனென்றால் இது எஸ்.எஸ்., 316 கிரேடுகளால் அமைக்கப்படும். கட்டடத்துக்கு எந்த சேதாரமும் இருக்காது.
* ரூப் கான்கிரீட்டுக்கு ரெடிமிக்ஸ் கான்கிரீட் உபயோகித்தால் வெடிப்பு வருகிறது என்கிறார்கள். அதை எப்படி தவிர்ப்பது?
–ரமேஷ்: ‘ரெடிமிக்ஸ் கான்கிரீட்’ முடிந்தவரை அதிகாலை அல்லது மாலை போடுவது நல்லது. பகலிலோ அல்லது பிற்பகலிலோ போடும்போது சீட்டின் மேல் நன்கு தண்ணீர் தெளித்து ஈரப்படுத்த வேண்டும். பின்பு ரெடிமிக்ஸ் கான்கிரீட் போட்ட 20 நிமிடம் கழித்து தண்ணீர் தெளிக்க வேண்டும். பின்பு 21 நாள் மிகாமல் தண்ணீர் தெளிக்க வேண்டும். அப்போது கான்கிரீட் வலிமை அடையும்.
* கட்டடத்தின் பில்லரை உடைக்காமல் அதன் வலிமையை அறிய முடியுமா?
–மோகன்: நிச்சயமாக முடியும். அதற்கு பெயர் ‘ரீபோவுண்ட் ஹேமர் டெஸ்ட்’. இந்த முறை நமது கட்டடத்தை சேதப்படுத்தாமல் ஒரு சிறிய இயந்திரம் உபயோகித்து நமது கட்டடத்தின் பில்லரின் வலிமையை அறிய முடியும். இதற்கென்று தனி நிபுணர்கள் உள்ளார்கள்.
–டேனியல்,
மக்கள் தொடர்பு அலுவலர்,
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம்(காட்சியா).
