தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/ மழைநீர் சேகரிக்க இதோ... இப்படி ஒரு எளிய வழி!

 மழைநீர் சேகரிக்க இதோ... இப்படி ஒரு எளிய வழி!

 மழைநீர் சேகரிக்க இதோ... இப்படி ஒரு எளிய வழி!

2


ADDED : ஜூன் 20, 2026 07:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 07:43 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நி லத்தடி நீர் வளம் குறையாமல் இருக்க மழைநீர் நிசேகரிப்பு முறைதான் நல்ல தீர்வு. ஆனால் உரிய முறையில் அமைத்தால் நல்ல பயன் கிடைக்கும். இப்போது மழைநீர் சேகரிப்பு தொட்டியை அமைக்க சில அடி ஆழம் மட்டுமே தோண்டுகிறார்கள்.

ஆனால், ஆழம் 21 அடி வரை இருக்க வேண்டும். இந்த அமைப்பு ஒரு சிறிய கிணறு போல் செயல்படும் வகையில் இருப்பது அவசியம். 3 அடி அகலம் கொண்டதாக மேல் மட்டம் இருக்க வேண்டும். 9 அடி ஆழம் வரை 3 அடி அகலம் இருக்கும்படியே குழிதோண்டிவர வேண்டும். அதற்கு மேல் இந்த குழியின் நடுவில் முக்கால் அடி அகல குழிதோண்டும் இயந்திரம் கொண்டு மீதமுள்ள 12 அடி ஆழத்திற்கு சீராக குழி தோண்ட வேண்டும்.

21 அடி நீளமும், முக்கால் அடி அகலமும் கொண்ட பிளாஸ்டிக் குழாய் அடி ஆழம் வரை கொண்டு செல்லப்பட்டு, மழை நீர் சேகரிப்பு அமைப்பின் மேல்மட்டத்தில் அதன் மேல் பகுதி கொண்டு வந்து நிறுத்தப்படும்.

அதன் வாய்ப் பகுதியை மூடி வைப்பது அவசியம். மேல்புறத்தில் இருந்து 9 அடி ஆழம் வரை 3 அடி அகலத்தில் குழி இருக்கும் என்பதால் அதை நிரப்புவதில் கவனம் வேண்டும். கூழாங்கற்கள் கொண்டு 9வது அடியில் நிரப்ப வேண்டும்.

அடுத்த 2 அடிக்கு பெரிய அளவிலான கரி துண்டுகள், அடுத்த 1.5 அடிக்கு ஆற்று மணல், அடுத்து சிறிய கற்கள் மற்றும் சரளை கற்கள் என்றபடி நிலை முறையில் தொட்டி நிரப்ப வேண்டும். இது மழை நீரை வடிகட்டி நிலத்தில் செலுத்தும் முறையாகும்.

பொதுவாக இவ்வளவு பெரிய மழை நீர் சேகரிப்பு முறைகளை அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகம், பெரிய கட்டடங்களில் ஏற்படுத்துவது எளிது.

சின்ன வீட்டாருக்கும் வழி இப்போது வீட்டு மனைகள் வாங்கி வீடு கட்டுபவர்கள், அக்கம் பக்கத்தினருடன் இணைந்து இதுபோன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி 5 முதல் 10 வீட்டினருக்கான தண்ணீரை அந்த மழைநீர் சேகரிப்பு தொட்டியில் விட்டால், அந்த சுற்றுப்பகுதி முழுவதும் நீர்வளம் நன்றாக இருக்கும்.

குழாய் வாயிலாக இணைப்பு கொடுத்து மழைநீரை கடத்தி அந்த தொட்டியில் விட்டாலும் பலன் கிடைக்கும்; அதிக செலவும் பிடிக்காது.

ஐந்து முதல் 10 வீடுகளை சேர்ந்தவர்கள் சேர்ந்து முயற்சி எடுத்தால் கோடை காலத்திலும் வற்றாமல் நிலத்தடி நீர் கிடைக்கும் என்கின்றனர் பொறியாளர்கள்.

வீட்டு மனைகள் வாங்கி வீடு கட்டுபவர்கள், அக்கம் பக்கத்தினருடன் இணைந்து இதுபோன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி 5 முதல் 10 வீட்டினருக்கான தண்ணீரை அந்த மழைநீர் சேகரிப்பு தொட்டியில் விட்டால், அந்த சுற்றுப்பகுதி முழுவதும் நீர்வளம் நன்றாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us