ADDED : ஜூன் 26, 2026 11:34 PM

இரண்டு ஆண்டுகளாக 'லிண்டல்' மட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட எனது கட்டுமான பணிகளை திரும்பவும் தொடர்வதற்கு முன்: -ஸ்ரீதேவி: முதலில் காலம், பீம், லிண்டல் பகுதிகளில் கிராக், கான்கிரீட்டில் பிரச்னை, துரு ஆகியவை உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். வெளியில் தெரியும் 'ரீஇன்போர்ஸ்மென்ட் ஸ்டீல்' பகுதியில் துரு இருந்தால் சுத்தம் செய்து பழுதை சரி செய்ய வேண்டும். மட்டம் அளவீடுகள், தண்ணீர் கசிவு மற்றும் ஸ்டிரக்ச்சுரல் ஸ்டெபிலிடி மீண்டும் கட்டாயம் சோதனை செய்யவும். கட்டுமான இன்ஜினியர் ஆலோசனையுடன் பணியை தொடர்வது சிறந்தது.
தரைத்தளம் மட்டுமே கொண்ட எனது வீட்டில் வாஷிங் மெஷின்: -நவீன்குமார்: 'பூஸ்டர் பம்ப்' செய்முறை தீர்வு தரும். வாஷிங் மெஷின் உள்ளிட்டவற்றுக்கு தானியங்கி பூஸ்டர் பம்ப் அமைத்து, தேவையான பாயின்ட்டுக்கு மட்டும் தனி அழுத்தம் தரும் 'லைன்' கொடுக்கலாம். குழாயின் அளவு, வடிகட்டி மற்றும் அடைப்பு ஆகியவற்றை அடிக்கடி சோதனை செய்து உப்பு படிமானம் அடைக்காமல் இருப்பதை உறுதி செய்வது அவசியம். அல்லது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உயரத்தை அதிகரிக்கவும்.(10-15 அடி உயரம் நல்லது).
எனது வீட்டுக்கு சோலார் மின் உற்பத்தி உபகரணம் பொருத்த என்ன செய்ய வேண்டும்?: -ஸ்ரீதர்: உங்கள் வீட்டின் மின் இணைப்பு விவரம்(சர்வீஸ் எண், இணைப்பு வகை) சரிபார்த்து தங்களுக்கு தேவையான 1 கிலோ வாட் முதல் 3 கிலோ வாட் வரையிலான 'சோலார் கெபாசிட்டி'யில் ஒன்றை தேர்வு செய்யவும்.
பிறகு மொட்டை மாடியில் அதிக வெயில்படும்(நிழல் இல்லாத) இடமாக தேர்வு செய்து 'சோலார் இன்ஸ்டாலர்' அமைத்தல் அவசியம்.
உங்கள் இ.பி., வாயிலாக 'நெட் மீட்டர் அப்ரூவல்' பெற வேண்டும். இன்ஸ்டலேஷன் முடிந்த பிறகு மின் ஆய்வு செய்து கிரிட் இணைப்பு வழங்குவார்கள்.
வீட்டு உபயோகத்திற்கு சோலார் பேனல் அமைக்க இந்திய அரசால் 'பிரதமரின் சூரிய வீடு' திட்டத்தின் கீழ் 3 கிலோவாட் வரையிலான சோலார் இன்ஸ்டலேஷன் செய்ய ரூ.78,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.
கட்டுமானத்திற்கு பாரம்பரிய முறையான சிகப்பு செங்கல்தான் பயன்படுத்த வேண்டும் என எனது குடும்பத்தினர் கூறுகின்றனர்; எது சிறந்தது?: -பிரபு: தற்போது நடைமுறையில் பிளையேஷ் பிரிக்ஸ் மற்றும் ரெட் பிரிக்ஸ் இரண்டுமே நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு, பல கட்ட தரக்கட்டுப்பாட்டு சோதனைகளுக்கு பிறகு பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கு மாற்றாக சாலிட் பிரிக்ஸ், லைட்வெயிட், இன்ஜினீர்டு பிரிக்ஸ், ஏ.ஏ.சி., பிளாக், லேட்டரைட் ஸ்டோன் பிரிக்ஸ் போன்ற பல்வேறு வகை கட்டுமான பொருட்களையும் கட்டடத்தின் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.
எனது வீட்டின் மேல்நிலை தொட்டியில் தண்ணீர் நிறைந்து வீணாகிறது. தவிர்க்க வழி உண்டா?: -ராமு: மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் நிறைந்து வீணாவதை தடுக்க தானியங்கி கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தலாம். தண்ணீர் நிறைந்தவுடன் மோட்டார் தானாகவே நிறுத்திவிடும்.
-பிரவீன்குமார்: நிர்வாக அலுவலர்: கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம்: (காட்சியா).:
