sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

ஆலோசனை

/

மண் பரிசோதனை அவசியம் செய்ய வேண்டுமா?

/

மண் பரிசோதனை அவசியம் செய்ய வேண்டுமா?

மண் பரிசோதனை அவசியம் செய்ய வேண்டுமா?

மண் பரிசோதனை அவசியம் செய்ய வேண்டுமா?


ADDED : மார் 01, 2025 06:10 AM

Google News

ADDED : மார் 01, 2025 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எங்கள் வீடு கட்டி ஒரு வருடம் ஆகிறது. அனைத்து அறை நிலவுகளில் கரையான் உள்ளது. சமையல் அறையில் கப்போர்டுகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், வீடு கட்டிய கான்ட்ராக்டர் கரையான் மருந்து பயன்படுத்தியும், தற்போது கரையான் வருகிறது; சரி செய்வது எப்படி.

-ராஜ்குமார், வடவள்ளி.

பொதுவாக நிலவுகளில் பயன்படும் மரங்களை, நல்ல முறையில் 'சீசன்' செய்திருக்க வேண்டும். சமையல் அறையில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள பிளைவுட்கள், 'ஆன்ட்டி டெர்மின்ட்' பிளைவுட்டாக இருக்க வேண்டும். கட்டடங்களில் பயன்படுத்தப்படும் கரையான் ஒழிப்பு மருந்தை பவுண்டேஷன் குழிகள், பேஸ்மென்ட் பில்லிங், டைல்ஸ் பதிப்பதற்கு முன், 19 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் மருந்துடன் கலந்து, சரியான முறையில் பயன்படுத்தினால், கரையான்கள் வராது.

நாங்கள் புதிதாக வீடு கட்ட முடிவு செய்து, இன்ஜினியர் ஒருவரிடம் கேட்டபோது, வீடு கட்டும் இடத்தின் மண்ணின் தன்மையை, சோதனை செய்த பிறகு 'ஸ்ரக்சுரல் டிசைன்' செய்து கட்டுவதுதான் சரி என்கிறார். இது அவசியம் தானா?

-ரவிபாரதி, போத்தனுார்.

ஆம். வீடு கட்டும் போது மண்ணை பரிசோதித்து, அதன் தாங்கும் திறனுக்கு ஏற்றார் போல் அமைப்பது மிகவும் அவசியம். இன்று பல நவீன கட்டட அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. மண்ணை சரியாக பரிசோதித்து பயன்படுத்தினால், கட்டடம் வலிமையானதாகவும், நிலநடுக்கத்தை தாங்கும் வகையிலும் இருக்கும்.

எங்களது நிலத்தடி தொட்டியில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு எத்தனை நாட்களுக்கு ஒரு முறை குளோரின் பவுடர் சேர்க்கலாம். எத்தனை லிட்டர் தொட்டிக்கு எவ்வளவு சேர்க்க வேண்டும்.

-விஜயகுமார், வரதராஜபுரம்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது, தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வது அவசியம். தண்ணீரில் பாசி, வண்டல் மண், பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிர்கள் வளர்கின்றனவா என்பதை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். 1,000 லிட்டர் தண்ணீருக்கு வாரத்திற்கு ஒரு முறை, 1.5 டீஸ்பூன் அளவுக்கு குளோரின் பவுடர் பயன்படுத்த வேண்டும். தண்ணீரின் குளோரின் தன்மை, 3-5 பி.பி.எம்., இருந்தால் நல்லது.

நாங்கள் புதிதாக கட்டிய வீட்டில் சில நேரங்களில் பாத்ரூமில் அடிக்கடி வாட்டர் ஹீட்டரில் பிரச்னை ஏற்படுகிறது. வாட்டர் ஹீட்டர் பொருத்துபவர் உங்கள் வீட்டில் எர்த்திங் சரியாக இல்லை என்கிறார். இதற்கு தீர்வு என்ன?

-குமார், மாதம்பட்டி.

கண்டிப்பாக எல்லா வீட்டிலும், ரெசிடென்சியல் கரன்ட் சர்க்கியூட் பிரேக்கர்(ஆர்.சி.சி.பி.,) என்ற சர்க்யூட் பிரேக்கரை பொருத்த வேண்டும். இதனால், மின் கசிவை கண்டறிந்து உடனே மின்சாரத்தை துண்டித்து, மின்சாதனங்கள் பாதுகாக்கப்படும்.

நாங்கள் கட்டி வரும் வீட்டில் உள்ள, பில்லர் கம்பிகள் நிறம் கருப்பாக மாறி வருகிறது. சில கம்பிகளை சுற்றி பூஞ்சை பூத்தது போல் இருக்கிறது. எப்படி சரி செய்வது?

-செல்வராஜ்,கணபதி.

கட்டடத்தின் வெளிப்புறமாக உள்ள கம்பிகளை சரியான முறையில் பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம். சில ஆண்டுகளுக்குப் பிறகு, நாம் கட்டடம் கட்ட இந்த வகையான கம்பிகளை, வெளிப்புறத்தில் நீட்டித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு நீட்டித்து வைத்திருக்கும் கம்பிகளை ஆன்டி கரோசிவ் பெயின்டை பூசி, சுற்றுப்புற சூழலோடு தொடர்பு இல்லாதவாறு செய்து கொள்வது அவசியம்.

-விஜயகுமார்

தலைவர், கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியளர் சங்கம் (காட்சியா).






      Dinamalar
      Follow us