/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
தரமான பொறியாளர்களுக்கு மட்டுமே விஷயம் தெரியும்! சொல்கிறார் பி.ஏ.ஐ., முன்னாள் தலைவர்
/
தரமான பொறியாளர்களுக்கு மட்டுமே விஷயம் தெரியும்! சொல்கிறார் பி.ஏ.ஐ., முன்னாள் தலைவர்
தரமான பொறியாளர்களுக்கு மட்டுமே விஷயம் தெரியும்! சொல்கிறார் பி.ஏ.ஐ., முன்னாள் தலைவர்
தரமான பொறியாளர்களுக்கு மட்டுமே விஷயம் தெரியும்! சொல்கிறார் பி.ஏ.ஐ., முன்னாள் தலைவர்
ADDED : ஆக 31, 2024 12:41 AM

''கட்டடங்களுக்கு என்று சில தரக்கோட்பாடுகள் உள்ளன,'' என்று விவரிக்கிறார், பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, கோவை மைய, முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம்.
உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு பெறாத பொறியாளர்களை கொண்டு வீடு கட்டினால், சிரமங்களை சந்திக்க நேரிடுமா? விளக்கம் தேவை.
- எம்.வசந்த், பீளமேடு.
வரைபட ஒப்புதல் பெறுவதற்கு மட்டும், உள்ளாட்சி துறை மற்றும் உள்ளூர் திட்டக் குழுமத்தில், பொறியாளர்கள் தங்கள் பதிவுகளை செய்து கொள்கிறார்கள். எந்த ஒரு பொறியாளரும், அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட அல்லது அரசாங்கத்தில் ஏதோ ஒரு துறையில் தன்னை பதிவு செய்து கொள்கிறார்கள்.
வீடு கட்டுவதற்கு தரமான பொறியாளரா என்பதை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு தரமான பொறியாளருக்கு மட்டுமே, எவ்வாறு ஒரு கட்டடத்தை நன்றாக ஆரம்பித்து, எப்படி நேர்த்தியாக முடிக்க வேண்டும் என்று தெரியும்.
நாம், ஒரு பொறியாளரை தேர்வு செய்வதற்கு முன், அவர் கட்டிய பிற கட்டடங்களை நேரில் கண்டு அறிந்து அதன் தரத்தை அறிந்து கொள்ளலாம்.
கனமழை, இடி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் வரும்போது தான் கட்டடங்களின் பலவீனங்கள் தெரியவரும் என்கிறார்களே... பாதிப்பு வந்தால், எப்படி தெரிந்து கொள்வது?
--ஆர்.சுகந்தி,மேட்டுப்பாளையம்.
இன்றைய சூழலில் கட்டப்படும் அனைத்து கட்டடங்களும், இயற்கை சீற்றங்களை மனதில் வைத்தே பொறியாளர் கட்டடத்தை வடிவமைக்கிறார். அரசும், பொறியாளர்களுக்கு கட்டடத்தை வடிவமைக்கும் நெறிமுறைகளை கொடுத்துள்ளது.
மழை காலங்களில் சில இடங்களில் ஓதம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளன. இத்தகைய சூழல்களில் நம் வீட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் பெயின்டிங்கில் அந்த ஓதங்களை தடுப்பதற்கு உண்டான ரசாயனங்களை கலந்தே அவை தடுக்கப்படுகின்றன.
மேற்கூரைக்கு மேலே சுருக்கி அமைக்கும்போதே நன்றாக திட்டமிட்டு அமைத்தால் ஓதம் வருவதை தடுக்க முடியும். அரசின் வழிகாட்டுதல் படியும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டடத்தை வடிவமைத்து, தரமான பொருட்களை கொண்டு கட்டடம் கட்டுவதாலும், நிலநடுக்கம் உட்பட பாதிப்புகள் ஏற்படும் போது உயிர் சேதங்கள் தவிர்க்கப்படுகின்றன.
கட்டடங்களுக்கு என்று தரக்கோட்பாடுகள் இருக்கின்றனவா, அதன் படி தான் வீடு மற்றும் கட்டடங்கள் கட்டுப்படவேண்டுமா? -
-என். நிகிலன், பேரூர்.
ஆம். கட்டடங்களுக்கு என்று தரக் கோட்பாடுகள் உள்ளன. BIS (Bureaus of indian standards) இந்திய தரக்கட்டுப்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட NBC (NATIONAL BUILDING CODE) எனப்படும் புத்தகத்தில் அனைத்து விதமான ஆலோசனைகளும், விதிகளும் தரப்பட்டுள்ளன.
முக்கியமாக, கட்டடங்களுக்கு உபயோகப்படுத்தப்படும் கான்கிரீட்டில், சிமென்டின் அளவு குறைந்தபட்சம் எவ்வளவு உபயோகப்படுத்த வேண்டும் என்று, இந்திய தரக்கட்டுப்பாட்டு மையத்தால் நிர்ணயம் செய்யப்பட்டு, அதைIS 456 தொகுத்து வழங்கி இருக்கிறார்கள்.
கட்டடத்திற்கு உபயோகப்படுத்தப்படும் மணல் மற்றும் ஜல்லியின் தரம் மற்றும் எந்த கட்டடத்துக்கு எந்த மணலை தேர்ந்தெடுக்கலாம் என்பதையும், இந்திய தரக்கட்டுப்பாட்டு மையத்தால் நிர்ணயம் செய்யப்பட்டு, அதை, IS 383 மற்றும் IS 2386ல் தொகுத்து வழங்கிஇருக்கிறார்கள்.
ஒவ்வொரு அறையின் அளவு மற்றும் கட்டடத்தின் உயரம், குறைந்தபட்சம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையும், அறைக்கு தேவையான ஜன்னல்கள் அளவு மற்றும் எண்ணிக்கையையும் என்.பி.சி., புத்தகத்தில் வழங்கி இருக்கிறார்கள்.
துாண்கள், உத்திரம் மற்றும் மேற்கூரையில் உபயோகப்படுத்தப்படும் கம்பிகள் எவ்வாறு கட்டப்பட வேண்டும் என்றும், அவை எவ்வாறு இணைக்கப்பட வேண்டும் என்பதையும் நிர்ணயம் செய்யப்பட்டு, IS 13920ல் தொகுத்து வழங்கி இருக்கிறார்கள்.