/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கவனக்குறைவால் ஏற்படும் விரிசல்களை தடுக்க வழி சொல்கிறார் 'கொசினா' முன்னாள் தலைவர்
/
கவனக்குறைவால் ஏற்படும் விரிசல்களை தடுக்க வழி சொல்கிறார் 'கொசினா' முன்னாள் தலைவர்
கவனக்குறைவால் ஏற்படும் விரிசல்களை தடுக்க வழி சொல்கிறார் 'கொசினா' முன்னாள் தலைவர்
கவனக்குறைவால் ஏற்படும் விரிசல்களை தடுக்க வழி சொல்கிறார் 'கொசினா' முன்னாள் தலைவர்
ADDED : மே 04, 2024 12:22 AM

வீட்டில் ஏற்படும் சிறு, சிறு விரிசல்கள், நம் கவனக்குறையால் ஏற்படுகின்றன. இதை முறையான பராமரிப்பால் தடுக்கலாம் என்கிறார், கொசினா முன்னாள் தலைவர் பாலமுருகன்.
அவர் கூறியதாவது:
வீட்டில், ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது நீர் வழிப்பாதைகளை பரிசோதிக்க வேண்டும். மேலும் செடிகள் வைப்பதும், தோட்டம் பராமரிப்பதும் அதற்கான வேலையாட்களை வைத்து பணி செய்யும் போது, அவர்களுக்கு குழாய் இருப்பது தெரியாமல் சேதப்படுத்தி விடுவர்.
மண் தரையில் சேதமான குழாயானது, பணி செய்த வேலையாட்களுக்கும் சேதமடைந்தது தெரியாது. சிறிது, சிறிதாக நீர் கசிந்து கொண்டே இருக்கும். குழாய் எங்கெங்கு உள்ளது என்று, தோட்டப் பணி வேலையாட்களிடம் நீங்கள் தான் கவனப்படுத்த வேண்டும்.
சமையலறையில் கவனம்
சமையலறையில் உள்ள கழிவுநீர் வெளியேறும் குழாய் கழிவுநீர் தொட்டியின் இணைப்பு பாகம், பாத்திரங்கள் கழுவும் தொட்டி ஆகிய பகுதியில் கூடுதல் கவனம் தேவை.
பாத்திரங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீருடன், திடமில்லாத மாவு தன்மையுடனான பவுடர் போன்ற கழிவுகள் தொடர்ந்து சென்றுக் கொண்டிருக்கும். இந்த பவுடர் போன்ற மிருதுவான கழிவுகள், அதிக நீரை ஊற்றி வெளியேற்றினால் அது குழாயின் அடிபாகத்தில் தேங்காது. குறைவான நீரை கொண்டு வெளியேற்றினால், மிருதுவான பவுடர் கழிவுகள் தேக்கமடையும்.
பாத்திரங்கள் கழுவி முடிந்தவுடன், அதிகப்படியான நீரை கொண்டு குழாயில் விட வேண்டும். இல்லை எனில், சிங்க் கீழ்புறம் அமைக்கப் பெற்ற இணைப்பு தொட்டியில் தேக்கமாகி சிறிது சிறிதாக நீர்கசிவு இணைப்பு வழியாகவும், சுவரில் பதித்துள்ள குழாய்கள் தேக்கத்தால் ஒரு வித அழுத்தத்தால், இணைப்பில் வெடிப்பு ஏற்பட்டு அது சுவரில் பரவி, நீர்கசிவாக மாறி, கண்ணுக்கு உடனே புலப்படாத விரிசல்களால் சுவரை பாதிக்கும்.
சமையல் அறையின் உட்புறம் ஒரு வித துர்நாற்றம் வரும். சமையல் அறையின் மேடையின் கீழ் அமைக்கப் பெற்ற மரத்தால் ஆன பொருட்கள் பழுதாகும். சிங்க் கழிவு வெளியேறும் குழாயின் வழியாக, திட பொருட்களை வெளியேற்றக் கூடாது.
குளியலறையில் சேகரமாகும் திடப் பொருட்களை, கழிவு நீர் குழாய் வழியாக செலுத்தக் கூடாது. உடனடியாக அகற்றி விட வேண்டும். குடிநீர் மேல் தொட்டிக்கு செல்லும் நீர் குழாய்க்கு காற்று வெளியேறும் பைப் வைக்க வேண்டும்.
அது 'T' வடிவத்தில் மேலும் அதன் இணைப்பு வெளிப் பகுதியில் ஒரு வளைவு பைப்பை இரண்டு பக்கமும் இணைக்க வேண்டும்.
காக்கை, குருவியால் தொல்லை
இவ்வாறு, கூடுதல் இணைப்பு பகுதி அமைக்க காரணம், காக்கை, குருவி, அணில் போன்றவை அதற்கு தேவையான பொருட்களை 'T' வடிவ குழாயில், சிறிது, சிறிதாக சேமித்து வைக்கும்.
நாளடைவில் அது நீண்ட குழாயின் வழியே வர வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு வந்து காற்று வெளியேறும் குழாயில் அடைபடும். இந்த பராமரிப்பும் அவசியம். கூடுதல் இணைப்பு குழாய் இல்லை எனில், காற்று மட்டும் வெளியேறும் வண்ணம் வளை கட்டி விடலாம்.
மொட்டை மாடியில் பிற்கால தேவைக்காக, பில்லர் கம்பிகள் வெளியில் தெரியும் படி அமைத்திருப்பீர்கள். இந்த கம்பிகள் முழுவதும் வெளிப்புறம் தெரியாத படி கான்கிரீட் அமைத்தால் நல்லது.
இல்லை எனில், கம்பிகள் துருப்பிடித்து அதன் வழியே நீர் நுழைந்து கட்டடம் பாதிக்கும். இதுபோன்ற சில நடைமுறைகளை கையாண்டால், கட்டட பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.