/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
வீடு விற்பனைக்கு பின் கட்டுமான நிறுவனம் அளிக்கும் சேவைகள் என்ன?
/
வீடு விற்பனைக்கு பின் கட்டுமான நிறுவனம் அளிக்கும் சேவைகள் என்ன?
வீடு விற்பனைக்கு பின் கட்டுமான நிறுவனம் அளிக்கும் சேவைகள் என்ன?
வீடு விற்பனைக்கு பின் கட்டுமான நிறுவனம் அளிக்கும் சேவைகள் என்ன?
ADDED : மார் 07, 2025 08:40 PM
பொதுவாக புதிய வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இருப்பர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. ஆனால், எப்போது, யாரிடம் இருந்து வீட்டை வாங்க வேண்டும் என்பதில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்பது அவசியம்.
இன்றைய சூழலில் பல்வேறு வழிகளில் கிடைக்கும் தகவல் அடிப்படையில் குறிப்பிட்ட சில கட்டுமான திட்டங்களை பட்டியலிட்டு அதில் ஏதாவது ஒரு வீட்டை தேர்வு செய்வது வழக்கமாக உள்ளது. அதிலும், திட்டம் அறிவிக்கப்படும் நாளில் வீட்டை வாங்குவதா அல்லது கட்டுமான பணிகள் நடக்கும் போது, முடிந்த நிலையில் என எந்த நிலையில் வீட்டை வாங்குவது என்பதிலும் குழப்பம் ஏற்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புதிய திட்டம் அறிவிக்கப்படும் நாளில், அதில் வீடு வாங்க பெரும்பாலான மக்கள் முன்பதிவு செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால், ஏதாவது சிக்கல் காரணமாக அந்த திட்டம் பாதியில் கைவிடப்படும் நிலையில், முன்பதிவு செய்தவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
இதனால், கட்டுமான பணி துவங்கிய பின் வீடு வாங்கும் பழக்கம் அதிகரித்தது என்றாலும், தற்போது, பெரும்பாலான பகுதிகளில் கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் வீட்டை வாங்கவே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதில், அடுத்த சில மாதங்களில் வீடு ஒப்படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதற்கு அப்பால், ஒரு வீட்டை வாங்கிய பின் அதில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திடம் என்னென்ன விஷயங்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்பது மிக முக்கியம். குறிப்பாக, ஒரு நிறுவனம் வீட்டை ஒப்படைத்த பின் அதில் பயன்பாட்டு நிலையில் வாடிக்கையாளருக்கு எப்படி உதவுகிறது என்பதை மக்கள் கவனிக்கின்றனர்.
தரமான முறையில் வீட்டை கட்டி கொடுத்தாலும், பயன்பாட்டு நிலையில் சில விஷயங்களை சரிசெய்ய வேண்டும் என்ற தேவை எழும். இது போன்ற சமயத்தில் சம்பந்தப்பட்ட கட்டுமான, நிறுவனத்தை தான் மக்கள் அழைப்பர் எனும் போது, அதற்கான பணியாளர்களை ஒதுக்க வேண்டும்.
பொதுவாக பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள், வீட்டை விற்பது, ஒப்படைப்பது வரையிலான பணிகளில் வாடிக்கையாளருக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறது. ஆனால், விற்பனைக்கு பிந்தைய நிலையில், எழும் தேவைகளை பூர்த்தி செய்ய குறிப்பிட்ட எண்ணிக்கையில் பணியாளர்களை வைத்து இருக்க வேண்டும்.
உதாரணமாக, ஒரு வீட்டை ஒப்படைத்த நிலையில் தண்ணீர் விநியோகம், கழிவுநீர் வடிகால், சுவர்களில் ஏற்படும் சிறு விரிசல்களை சரிசெய்வது போன்ற பணிகளில் கட்டுமான நிறுவனத்தின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இது சாதாரண விஷயம் தான், பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் வந்து செய்து கொடுத்துவிடுவர்.
ஆனால், இந்த விஷயங்களை வீட்டை விற்ற கட்டுமான நிறுவனம் உரிய ஆட்களை அமர்த்தி செய்து கொடுக்கும் போது மக்களிடம் கூடுதல் நம்பிக்கை ஏற்படும். இது சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் மீதான நன்மதிப்பை அதிகரிக்கும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.