/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
உங்கள் வீட்டுக்கு ஏற்ற தரைவிரிப்பு எது?
/
உங்கள் வீட்டுக்கு ஏற்ற தரைவிரிப்பு எது?
ADDED : ஆக 03, 2024 06:54 AM

மழை காலத்தில், குளிரான சூழல் நிலவும் நிலையில், பெரும்பாலான வீடுகளில் டைல்ஸ் மற்றும் மார்பிள் கொண்ட தரை தளங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இப்போதிருக்கும் காலநிலையில், அதன் வாயிலாக, பாதங்கள் 'சில்'லிட்டு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
அதற்கு, சரியான தரை விரிப்புகளை பயன்படுத்துவதன் வாயிலாக, பாதிப்பு தன்மையில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். வீட்டின் அலங்காரம் மற்றும் வண்ணத்தை கருத்தில் கொண்டு தரை விரிப்புகளை தேர்வு செய்யலாம். சுற்றுச்சூழலுக்கு தகுந்த கம்பளி, மூங்கில் மற்றும் சணல் போன்ற இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட தரை விரிப்புகள் உகந்தது.
நைலான், பாலியஸ்டர் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட தரை விரிப்புகள், கறை மற்றும் கசிவுகளுக்கு அதிக எதிர்ப்பு கொண்டது. அதிகமானவர்கள் பயன்படுத்தும் அறைகள் என்றால், அதற்கு வெளிர் நிறம் உகந்தது அல்ல.
குறிப்பிட்ட இடத்தில் குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவார்களா அல்லது அந்த இடம் அலுவலக மற்றும் பலவித பயன்பாட்டுக்கு ஏதுவானதாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். வெளிர் நிறம் என்றால், பராமரிப்பு சற்று கடினமாகி விடும்.
தரை விரிப்புகளின் நிறத்தை பொருத்து, ஒரு அறை சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ காட்சியளிக்கும். அடர் நிறமாக இருந்தால், பெரிய அறை கூட சிறியதாக காட்சியளிக்கலாம்.
வெளிர் நிறங்களை பயன்படுத்தும் போது, அறை சற்று விசாலமாக இருப்பது போல் தோன்றும்.
வீட்டில் உள்ள மற்ற நிறங்களோடு இணக்கமாக இருக்கும் நிறத்தில் உள்ள தரை விரிப்புகள் கூடுதல் அழகு தரும். அறைக்குள் சூரிய ஒளி அப்படியே விழும் பட்சத்தில், தரைவிரிப்பின் உண்மையான நிறம் அப்படியே எதிரொலிக்கும்.
அதே சமயம், தரை விரிப்புகள் அழகாகவும், சுத்தமாகவும் இருக்க அடிக்கடி பராமரிப்பு தேவைப்படுகிறது. தரை விரிப்புகள் வாங்கும் போது, கடையில் சரியான வெளிச்சத்தில் பார்த்து வாங்குவது நல்லது.