/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தும் கட்டட வரைபடம் கையில் இருக்க வேண்டும்
/
பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தும் கட்டட வரைபடம் கையில் இருக்க வேண்டும்
பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தும் கட்டட வரைபடம் கையில் இருக்க வேண்டும்
பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தும் கட்டட வரைபடம் கையில் இருக்க வேண்டும்
ADDED : ஜன 17, 2026 05:10 AM

க ட்டுமான அமைப்பு வரைபடமானது கட்டடத்தின் அடித்தளம், துாண்கள், உத்தரங்கள், அடித்தள சுவர்கள், சுமை தாங்கும் சுவர்கள், புளோர் ஸ்லாப், ரூப் ஸ்லாப் விபரங்களை விளக்குவதாக இருக்கும். கான்கிரீட்டின் வகைகள் கம்பிகளின் வகைகள், அளவுகள் ஆகிய கட்டுமானத்துக்கான பொருட்கள் பற்றிய விபரங்களும் இடம்பெறும்.
எனவே, கட்டுமான அமைப்பு வரைபடம் இல்லாத கட்டடத்தின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை அவ்வளவு சுலபமாக மதிப்பிட முடியாது. குடியிருப்பு கட்டடங்களை வாங்குபவர்கள் விற்பவரிடம் இருந்து கட்டாயமாக கட்டுமான அமைப்பு வரைபடத்தை கேட்டு வாங்குவது அவசியம்.
தேசிய கட்டட விதிகளின்படி, கட்டடத்தின் பயன்பாட்டின் அடிப்படையில் தாங்கக்கூடிய சுமையை கணக்கிட்டு, அதற்கேற்ப கட்டுமானத்தை வடிவமைக்க வேண்டியது கட்டுமான பொறியாளரின் பொறுப்பு.
கட்டுமான பணியை துவங்கும் முன்பு வரைவாளரை கொண்டு வரைபடம் தயாரிக்க வேண்டும்.
இன்போர்ஸ்மென்ட் டைப், கம்பி அளவு, கட்டுமான பொருளின் தரம் ஆகியவை குறிப்பிடப்பட்ட வரைபடத்தை அடிப்படையாக கொண்டு ஒரு கட்டுனர், கட்டடத்தை உருவாக்க வேண்டும்.
பல்லடுக்கு மாடி கட்டடமாக இருந்தாலும், எவ்வளவு பெரிய கட்டடமாக இருந்தாலும் அதில் மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தால், கட்டுமான அமைப்பு வரைபடம் தேவைப்படும்.
ஏற்கனவே உள்ள அறையை பெரிதாக்க அல்லது கூடுதல் அறை கட்டுவதற்கு பால்கனியை பயன்படுத்த நேரிடலாம்.
இது போன்ற பணிகளின்போது கட்டட அமைப்பு வரைபடம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. கட்டடத்தின் பயன்பாடு சில நேரங்களில் குடியிருப்பு நிலையில் இருந்து வர்த்தக பயன்பாட்டிற்கு மாறலாம்.
அத்தகைய சமயங்களில் பாதுகாப்பு அம்சங்களை அறிய, இந்த வரைபடம் அவசியம். எனவே, சொத்து ஆவணம் போன்று இந்த வரைபடம் உரிமையாளர்களிடம் இருக்க வேண்டும்.
மைய மற்றும் பக்கவாட்டு சுமை தாங்கும் அமைப்பு முறைகள், கட்டுமான அமைப்பு, வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பக்கவாட்டு சுமை தடுப்பு அமைப்பானது, வலுவூட்டப்பட்ட கான்கிரீட் உத்திரம், துாண் பிரேம் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது. அடித்தள அமைப்பானது மண்ணின் தன்மைக்கேற்ப இருக்கும்.
கட்டுமான பணியை துவங்கும் முன், கட்டட அமைப்பு வரைபடத்தை தயார் செய்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
- மாரிமுத்துராஜ்: உறுப்பினர்:

